1. வாழ்வும் நலமும்

நீங்கள் வாங்கும் சீரகம் போலியா? அடையாளம் காண்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Are the cumin you buy fake? How to identify?
Credit : Boldsky Tamil

கடைகளில் நாம் வாங்கும் சீரகத்தில் தற்போது போலிகளும் விற்கப்படுகின்றன. எனவே உண்மையான மற்றும் போலி சீரகத்தை நீங்கள் எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தனி இடம் (Separate place)

இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பல விதமான மசாலாப் பொருட்களில் ஒன்று சீரகம். உடலின் உள் உறுப்புகளைச் சீராக்கும் என்பதால்தான் அதன் பெயர் சீரகம் என்று அழைக்கப்படுகிறது.

ஜீரணம் (Digestion)

நம் உடலில் ஜீரணக்கோளாறு நீங்குவதற்காக, அனைத்து வீடுகளிலும், சமையலுக்கு சீரகம் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக சீரகம், மிளகு ரசம் என்பது தமிழகத்தில் மிகவும் பிரபலம். இதேபோல, சீரகக் குழும்பு, சீரகப்பொடி தோசை உள்ளிட்டவையும் மக்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவு வகைகளில் ஒன்று.

உடல் எடை குறைய ( weight Loss)

இந்த சீரகத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால், ஏராளமான நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் எடை குறையும்.

இதன் காரணமாக ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரது வீட்டு மசாலாப் பொருட்களின் பட்டியலில் சீரகம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

போலி சீரகம் (Fake cumin)

இப்போது பெரும்பாலான உணவுப் பொருட்களில் நிறையக் கலப்படம் செய்யப்படுகிறது. சீரகத்தில் நிறையக் கலப்படம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உண்மையான மற்றும் போலி சீரகத்தை நீங்கள் எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சந்தையில் சில இடங்களில் விற்கப்படும் சீரகம் போலியானது என்பது தெரியவந்துள்ளது. உண்மையில் இது ஒரு வகை புல் மூலம் கிடைக்கிறது. இது உண்மையான சீரகம் போல் இருக்கும்.

போலி சீரகம் எப்படி செய்யப்படுகிறது? (How fake cumin is made)

ஆறுகளின் கரையில் வளரும் காட்டுப் புற்களிலிருந்து இவைத் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் இந்த புற்களைப் பயன்படுத்தி கருப்பு சீரகமும் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உண்மையில், இந்த புற்கள் சீரகம் போலவே பார்ப்பதற்கு தோன்றும்.
இதைத் தயாரிக்க, ஆறுகளின் கரையில் வளரும் புல் போன்ற களைகளின் இலைகள் வெல்ல நீரில் ஊறவைக்கப்படுகின்றன.

உலர்த்தியப் பின் அது சீரகம் போல தோற்றமளிக்கும். பின்னர் இதில் ஒரு வகைத் தூள் கலக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, அது ஒரு சல்லடையில் போட்டு சலிக்கப்படுகிறது.

அடையாளம் காண்பது எப்படி? (How to identify?)

போலிச் சீரகத்தை அடையாளம் காண, முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் சீரகத்தை சேர்க்கவும். சீரகத்தில் உள்ள நிறம் கரைய ஆரம்பிக்கும். மேலும் அதை தண்ணீரில் போட்டப் பிறகு உடைக்க முடிந்தால், அந்த சீரகம் போலியானது.

மேலும் படிக்க...

நிம்மதியான தூக்கத்திற்கு நாங்கள் கியாரண்டி! இரவில் யோகா செய்வதால் இத்தனை நன்மைகளா?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!

பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

English Summary: Are the cumin you buy fake? How to identify? Published on: 13 March 2021, 10:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.