உடல் ஆரோகிகியமாக இருக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு மட்டுமல்லாது பழங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக தினமும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வித குறைகளும் வராது. அந்த வகையில் வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பலனை கொடுக்கிறது.
செவ்வாழை (Red Banana)
குறிப்பாக செவ்வாழை உடல் ஆரோக்கியத்திற்கும், சொறி சிரங்கு தோலில் ஏற்படும் வெடிப்பு மற்றும் சரும பாதிப்பு என எண்ணற்ற வியாதிகளுக்கு தீர்வாக அமைகிறது. செவ்வாழை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது தமனிகளில் இரத்தம் உறைவதை தடுக்கிறது. புற்றுநோய் மற்றுமு் இதயநோய் தொடர்பான பாதிப்புகளை குறைக்கிறது.
மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமு் செவ்வாழையில் வைட்டமின் சி பி6 உள்ளிட்ட சத்துக்க்ள அடங்கியுள்ளன. இந்த செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். அதேபோல் நீரிழிவு நோயாளிகள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவது உடல் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
இந்த செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது. எலும்புகள வலுவடையவும், இதயம் மற்றும் புற்றுநோய் தாக்குதல்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் செவ்வாழை பல நோய் தாக்குதல்களை தடுக்கவும், நோய் தாக்கத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் படிக்க
Share your comments