"வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடு" என்று பெரியோர் கூறுவர். ஊட்டச்சத்தில்லா உணவு, நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு உடலுக்கு ஆரோக்கியக்கேடு ஏற்படும் போது பலரும் மருத்துவரிடமே செல்கின்றனர். முன் கூட்டியே சத்தான ஆகாரத்தை எடுத்தால் வீண் அலைச்சல், செலவை தவிர்க்கலாம் என்பதற்காகவே அனுபவசாலிகளான நம் பெரியோர் இதைக் கூறியுள்ளனர். ஆரோக்கியத்தை கட்டிக் காக்க உங்க வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களே போதும்.
சீரகத் தண்ணீர் (Cumin Water)
அனைவரின் கிச்சனிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் முக்கியமான பொருட்களில் ஒன்று சீரகம். சமையலுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதை பயன்படுத்தலாம். முதல்நாள் இரவில் சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பார்க்கலாம்.
பயன்கள் (Benefits)
- சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அவை உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- உடல் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, கொழுப்பை கரைக்கிறது.
- உடல் எடை குறைப்பில் சீரகத்தின் பங்கு குறித்து ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நமது உடலை நீரேற்றம் செய்யவும் இது உதவுகிறது. இதனால், உடலிலுள்ள நச்சுகளை நீக்கி சுத்தப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
- சீரகத் தண்ணீரை தொடர்ந்து குடிப்பது ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு வழி வகுக்கிறது.
- அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற செரிமான பிரச்னைகளைத் தடுக்கிறது.
- புற்றுநோய்க்கான தாக்கத்தை குறைக்கிறது.
- இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் டைப் 2 நீரிழிவு பிரச்னையை கட்டுப்படுத்த உதவுகிறது.
- கருஞ்சீரக விதைகள் இரைப்பைப் பாதுகாப்பதுடன், அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளான நெஞ்செரிச்சல், வலி, குமட்டல், வீக்கம், மலச்சிக்கல் போன்றவற்றைக் குறைக்கின்றன.
- இதில், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து, ரத்தச்சோகை பாதிப்பை குறைக்கிறது.
- ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து இதயத்தை காக்கிறது.
- ஆரோக்கியம் மட்டுமின்றி சரும அழகுக்கும் கைக்கொடுக்கிறது இந்த சீரகத்தண்ணீர். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நச்சுக்களை வெளியேற்றுவதால் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்துக்கு வழிவகுக்கிறது.
- முகப்பரு, சருமத்தொற்றை தவிர்க்க உதவுகிறது. கூந்தல் பலத்தை அதிகரிப்பதுடன் உதிர்வு, இளநரை போன்ற பல பிரச்னைகளையும் தவிர்க்கிறது.
சீரகத் தண்ணீர் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை அளித்தாலும், அதிகமாக சேர்க்கும்போது நெஞ்செரிச்சல், பெண்களுக்கு அதிக மாதவிடாய், குறைந்த ரத்த சர்க்கரை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, உடல்நல பிரச்னைகள் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனைக்கு பின்னர் குடிக்கலாம்.
மேலும் படிக்க
உடல் ஆரோக்கிய நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸ்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
Share your comments