Garlic Water
சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு. இதில் பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பூண்டை சமைத்து உண்பது மற்றும் பச்சையாக அப்படியே உணவில் சேர்த்து சாப்பிடுவதை காட்டிலும், பூண்டை தண்ணீரில் சேர்த்து பானமாக குடிப்பதால் அதிக பலனைப் பெற முடியும்.
இரண்டு பூண்டு பல்லுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, தினந்தோறும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மாரடைப்பு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும்.
பூண்டு தண்ணீரின் பலன்கள் (Benefits of Garlic water)
வைரஸ் நோய்கள் இருக்கும் சமயத்தில் பூண்டு கலந்த நீரை குடிக்க வேண்டும். ஏனென்றால் பூண்டில் உள்ள வைட்டமின் பி1, பி6, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியாவுக்களுடன் எதிர்த்து போராடும் திறனைப் பெற்றுள்ளது.
செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு கலந்த தண்ணீரை தினந்தோறும் குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
அஜீரணம், வயிற்று வலி, வாயுப் பிடிப்புகள், மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் முற்றிலுமாக குணமடையும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு பொதுவாக அதிகமான வயிற்றுவலி இருக்கும். இது போன்ற நேரங்களில், காலையில் பூண்டு கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இது இரத்த ஓட்டத்தை சீராக்கி, வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
மேலும் படிக்க
Share your comments