ஊட்டச்சத்து மிகுந்த காளான் உணவை அனைவரும் விரும்பி உண்பர். காளான் அளவில் சிறிதாக இருந்தாலும் ருசியிலும், ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிப்பதிலும் சிறந்து விளங்குகிறது. பொதுவாகவே காளான் ஏராளமான ஊட்டச்சத்துக் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதனுடைய ஆரோக்கிய பண்புகளால் நம் உடலின் பல்வேறு பாகங்கள் பலவிதமான நன்மைகளை பெறுகின்றது.
காளானில் உள்ள சத்துக்கள்
காளான் குறித்து ஊட்டச்சத்து நிபுணரான லவ்நீத் பத்ரா, தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு சில முக்கிய குறிப்புகளை பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், காளான் ஒரு கொழுப்பு சத்தற்ற சோடியம் மற்றும் கலோரிகள் குறைந்த உணவாகும். மேலும், அதில் ஏராளமான நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது.
காளானின் ஆரோக்கியப் பலன்கள்
குறைந்த அளவில் சோடியம் மற்றும் அதிகமான அளவில் பொட்டாசியம் சத்துக்கள் காளானில் இருப்பதால், இது உடலில் உள்ள உப்பின் தன்மையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதன்மூலம், உடலுக்குள் இரத்த சுழற்சியை சீர்ப்படுத்துகிறது. நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகிறீர்கள் எனில், உங்களுக்கான மிகச் சிறந்த தேர்வாக காளான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வயதாவதைத் தடுக்கிறது
நம்மில் பலருக்கும் சிறு வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. இதனைத் தடுக்க காளான் தான் சிறந்த உணவாகும். மிக விரைவாக வயதான தோற்றம் அடைதல் ஆகியவற்றிலிருந்து காளான் நம்மைப் பாதுகாக்கிறது. காளானில் உள்ள கூறுகள், நம் உடலில் உள்ள ஃபிரீ ரேடிக்கல்களை செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தி, நீங்கள் வயதான தோற்றம் பெறுவதைத் தடுக்கிறது.
ஆரோக்கியமான குடல் செயல்பாடு
காளானில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்தான ஆலிகோசேக்கரைட், உங்கள் குடல் பகுதிகளில் ப்ரீபையோட்டிக்காக செயல்படுகிறது. இதனால், உங்கள் பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்களை பரவ விடுகிறது. இதன் மூலமாக உங்களது செரிமான சக்தியும், குடல் செயல்பாடும் ஆரோக்கியமாக அதிகரிக்கும்.
புற்றுநோய் எதிர்ப்பு கூறுகள்
காளானில் உள்ள லினோலெய்க், புற்றுநோய் எதிர்ப்பு கூறுகளாக செயல்பட்டு, நம்மைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட காளான் பெரிதும் பங்காற்றி வருகிறது.
மேலும் படிக்க
சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: சாதத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க!
Share your comments