1. வாழ்வும் நலமும்

கோழிக்கறி சமைக்கப்போறீங்களா? இதப்படிங்க முதலில்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Chicken
Credit : Youtube

நன்கு சமைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டையில் இருந்து, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ஹரியானா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், டில்லி, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்

காகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரும், பறவைகள் மூலம், 'ஏவியன் இன்ப்ளுயன்ஸா' எனப்படும், பறவைக்காய்ச்சல் பரவியிருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இதில், ஒன்பது மாநிலங்களில், பண்ணைக் கோழிகளுக்கும், இந்த நோய் பரவியிருப்பதை, மத்திய அரசு, உறுதி செய்துள்ளது. இதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., (FSSAI)எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: முழுமையாக நன்கு சமைக்கப்பட்ட, கோழி மற்றும் முட்டையில் இருந்து, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை.

பாதுகாப்பு விதிமுறைகள்

நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சியில் இருந்து தொற்று பரவாது.
முட்டைகளை பாதி வேகவைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கோழி இறைச்சியை கையாளும், சில்லரை வர்த்தகர்களும், அதை வீடுகளில் வாங்கி சமைப்பவர்களும், சில பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது மிக மிக அவசியம்.

  • பறவைக் காய்ச்சல் தொற்று உள்ள பகுதியில் வசிப்போர், பறவைகளை கைகளால் தொட்டு பழகுவதை தவிர்க்கவும்.
  • கோழி இறைச்சியை வெறும் கையால் தொடுவது கூடாது. 
  • கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிந்தே, கோழி இறைச்சிகளை கையாள வேண்டும்.
  • இறைச்சியை திறந்தவெளியில் வைக்க கூடாது.
  • பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து, கோழி மற்றும் முட்டைகள் வாங்கக் கூடாது.
  • வீடுகளில் கோழிகளை வெட்டும் போது, கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பானது.
  • மேலும், கோழியை சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்தி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், சமையலுக்கு பின், கிருமி நாசினி வாயிலாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
  • கோழி இறைச்சியை, நேரடியாக குழாய் நீரில் காட்டி கழுவக் கூடாது. இறைச்சியில் பட்டு தெறிக்கும் நீர் துளிகள் வாயிலாக, தொற்று பரவும் வாய்ப்புள்ளது.
    இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

மூளையை பாதிக்கும் சர்க்கரை! ஆய்வில் தகவல்!

English Summary: Are you going to cook chicken? Be the first to read this! Published on: 26 January 2021, 04:12 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.