தூக்கம் என்பது நம்முடைய உடலுக்கு கிடைக்கும் ஓய்வு. உடல் உறுப்புகளுக்குக் கிடைக்கும் இந்த ஓய்வு நம் அனைவருக்குமே மிக மிக அவசியமானது. ஆனால் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டதால், தூக்கமின்மை பிரச்சனை இந்த நாட்களில் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.
அவசரமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், உணவு மற்றும் பானங்களை தவறான நேரத்தில் எடுத்துக் கொள்வது என தூக்கம் இல்லாமல் தவிப்பதற்கு காரணங்கள் பல உண்டு.
தூக்கம் கெடுவதால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. உடல் பருமன், இதய நோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படவும் தூக்கமின்மைக்கு காரணியாகத் திகழ்கின்றன. அவ்வாறு தூக்கத்தைத் தொலைத்துவிட்டோமே என தினமும் வருத்தப்படுபவரா நீங்கள் ? உங்கள் பிரச்னைக்குத் தீர்வு காண இநத ஒரே ஒரு பானம் போதும். இதைக் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
இரவில் தூங்கும் முன்பு இந்தப் பாலைப் பருகினால், ஆழ்ந்த உறக்கம் கண்ணை அரவணைக்கும். அதுதான், முந்திரிப்பால்.
செய்முறை
-
ஒரு கைப்பிடி அளவு முந்திரியை எடுத்து, ஒரு கிளாஸ் பாலில் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.
-
முந்திரி நன்கு ஊறியதும், பாலில் இருந்து எடுத்து அதை அரைத்து வைக்கவும்.
-
அரைப்பதற்கு பாலை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட் நன்கு மைய அரைபட்டிருக்க வேண்டும்.
-
நன்றாக நைஸாக அரைபட்ட முந்திரி விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைக்கவும்.
-
பால் கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து 5-10 நிமிடங்கள்அடுப்பில் வைக்கவும்.
-
தேவைக்கேற்ப இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, பாலில் சுவைக்கேற்ப சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, மேலும் 3-4 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
-
இந்த முந்திரிப்பாலைச் சூடாகவோ, ஆற வைத்தோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளுமையாகவோ குடிக்கலாம்.
-
சர்க்கரை சேர்க்க விரும்பவில்லை என்றால், தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
-
முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற மூலங்கள் நிறைந்துள்ளன.
-
பொதுவாக முந்திரியை அளவாக உட்கொள்வது நல்லது. ஆனால், ஒவ்வாமை அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முந்திரிப்பாலை பருக வேண்டாம்.
முந்திரியின் ஆரோக்கிய நலன்களைப் பெற ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) முந்திரியை உட்கொண்டால் போதுமானது.
தகவல்
ருஜுதா திவேகர்
பிரபல ஊட்டச்சத்து நிபுணர்
மேலும் படிக்க...
நெல் மூட்டைகளை அடகு வைத்து கடன்- சாமர்த்தியமாகச் சுருட்டிய விவசாயி!
அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் - லட்சாதிபதி ஆக வாய்ப்பு!
Share your comments