நீரிழிவு பிரச்னையை போல மக்கள் சிலர் தைராய்டு பிரச்சைனயால் அவதிப்பட்டு வருகின்றனர். எப்படி நீரிழிவு பிரச்சனை இன்றைய நிலைமையில் சாதாரணாமாகப் பார்க்கப்பட்டு விட்டதோ அதே போல் தைராய்டும் வெறும் அயோடின் குறைபாடாகவே பார்க்கப்படுகிறது. அயோடின் குறைபாட்டால் கழுத்து பகுதியில் உள்ள எண்டோகிரைன் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு அலர்ஜி ஏற்படுவதே "தைராய்டு" ஆகும்.
மாறி வரும் உணவு முறையே தைராய்டு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும். பதப்படுத்தப்பட்ட உணவில் சேர்க்கப்படும் பொருட்கள் தைராய்டு சுரப்பிகளை சிதறடிக்கச் செய்து வலிமையை குறைக்கிறது.
தைராய்டு பெண்களை அதிகம் பாதித்தாலும், இது ஆண்களையும் எவ்வித பேதமுமின்றி பாதிக்கிறது என்பது உண்மை. தைராய்டில் இரு வகை உண்டு ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம்.
ஹைப்பர் தைராய்டிசம்
தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதுதான் ஹைப்பர் தைராய்டிசம். பரம்பரை காரணமாக இருந்தாலும், மன அழுத்தம், அதிக கவலை இருந்தாலும் தைராய்டு சுரப்பியை தூண்டி அதிகம் சுரக்க வைக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு கடகடவென உடை எடை குறைந்து விடும்.
ஹைப்போ தைராய்டிசம்
இதில் இரு வகை உண்டு
பிரைமரி தைராய்டு: கழுத்தத்தில் பட்டாம்பூச்சி போல இருக்கிற தைராய்டு சுரப்பி சரிகாய வேலை செய்யாத நிலை தான் பிரைமரி தைராய்டு. பரம்பரை காரணமாகவும் வரலாம். இதை நீங்கள் அறுவை செய்து எடுத்தாலும் மீண்டும் வர அதிக வாய்ப்புண்டு.
செகண்டரி தைராய்டு: மூலையில் இருக்கிற பிட்யூட்டரி சுரப்பி பிரச்னை ஏற்பட்டு அதனால் வருவதுதான் செகண்டரி தைராய்டு.
ஹைப்போ தைராய்டிசமானால் சருமம் வறண்டு போவது, முடி உதிர்தல், ரத்த சோகை, மலச்சிக்கல், கொலெஸ்ட்ரோல், உடல் சோர்வு, மாதவிடாய் பிரச்சனை, கருத்தரிப்பது தள்ளி போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தைராய்டு குறைபாடுகளை போக்க உதவும் இந்த மூன்று ஆசனங்கள்
* மத்ஸ்யாசனம்
இதை மச்சாசனம் என்றும் கூறுவார். இந்த ஆசனத்தை மேற்கொள்வதால் தைராய்டு சுரப்பி நன்கு செயல்படுகிறது. மூச்சு காற்று முறையாக இழுக்கப்படுவதால் ரத்தம் தூய்மை அடைகிறது.
* உத்தானபாதாசனம்
மலச்சிக்கல் நீங்குகிறது. இரைப்பை நன்கு செயல்படும். வயிற்றில் கொழுப்பு இருக்காது. ஆண்,பெண் இருவருக்கும் சரிசமமான பலன் கிடைக்கிறது.
* சர்வாங்காசனம்
ஆசனங்களின் தாயாக சர்வாங்காசனம் திகழ்கிறது. தைராய்டை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. இந்த ஆசனத்தால் மூளை நல்ல ரத்த ஓட்ட பெறுகிறது. தைராய்டால் ஏற்படும் குறைபாடுகளை போக்க உதவுகிறது.
இந்த மூன்று ஆசனங்களையும் தினசரி தொடர்ந்து செய்து வர உடலில் ஆரோக்கியம் கூடும். மேலும் இந்த ஆசனத்தை பற்றி சரியாக செய்ய யூ டியூப் வீடியோவை மேற்கொள்ளலாம்.
Share your comments