புளிப்பு சுவைக் கூடிய, நெல்லிக்காயின் நன்மைகள் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு காயாகும். நெல்லிக்காய் உடலுக்கும், கண்களுக்கும், முடிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிகவும் நல்லது. ஆயுர்வேத மருந்துகளில் கூட நெல்லிக்காய் பயன்படுகிறது. வைட்டமின்-சி, பாலிஃபீனால்கள், வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நெல்லிக்காயின் தனித்துவமான நன்மையாகும்.
நெல்லிக்காய், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய் என்றாலும், அனைத்து உடல் நிலையினருக்கும் நன்மைத் தரும் என்று சொல்ல முடியாது. நெல்லிக்காய் சிலருக்கு தீங்கு விளைவிப்பதால், மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படியா? யாருக்கெல்லாம் நெல்லிக்காய் எடுத்துக் கொள்வது ஆபத்தாகலாம். வாருங்கள் பார்ப்போம்.
கல்லீரல் நோய்யால் உள்ளவர்கள்(People with liver disease)
கல்லீரல் நோயாளிகள் நெல்லிக்காய் அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவுகளில் மட்டுமே நெல்லிக்காயை உட்கொள்ள வேண்டும். நெல்லிக்காயை அதிகமாக எடுத்துக்கொண்டால், கல்லீரல் நொதிகளின் அளவை அதிகரித்து, இது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
இரத்தக் கோளாறு உள்ளவர்கள்(People with Anaemia)
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க நெல்லிக்காய் சிறந்தது என்கிறது ஆயுர்வேதம். இதற்குக் காரணம், அதன் உறைதல் எதிர்ப்புப் பண்புதான். ஆனால் இரத்த சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நெல்லிக்காயில் உள்ள பிளேட்லெட் எதிர்ப்பு பண்புகள், இரத்தத்தை மெலிந்து, சாதாரண இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இரத்தப்போக்கு கோளாறு இருந்தாலும், நெல்லிக்காய் சாப்பிட வேண்டுமா என மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
குறைந்த இரத்த சர்க்கரை உள்ளவர்கள்(People with low blood sugar)
நெல்லிக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. ஆகவே, இரத்தச் சர்க்கரைக் குறைவு உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இது எதிர் விளைவை ஏற்படுத்தும்.
அதிக அமிலத்தன்மை உள்ளவர்கள்(Those with high acidity)
நெல்லிக்காயில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது. இது அமிலத்தன்மையை உண்டாக்கும் சத்து கொண்டதாகும். எனவே அதிக அமிலத்தன்மை உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும்.
அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள்(Those are going for surgery)
அறுவை சிகிச்சைக்கு தயாராகும் நோயாளிகளுக்கு நெல்லிக்காய் உட்கொள்வது நல்லதல்ல. ஏனெனில் நெல்லிக்காய் இரத்தப்போக்கு அபாயத்தையும் அதிகரிக்கிறது. அறுவை சிகிச்சைக்கு முன், அதாவது குறைந்தபட்சம் 15 நாட்கள் முன்பு வரை நெல்லிக்காய் தவிர்ப்பது அவசியம்.
வறண்ட சருமம் உள்ளவர்கள்(Those with dry skin)
வறண்ட சருமம் கொண்டவர்கள், நெல்லிக்காயின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். ஏனெனில் நெல்லிக்காய் முடி உதிர்தல், அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும். நெல்லிக்காயில் உள்ள சில சேர்மங்கள் நீரழிவை உண்டாக்கி, சருமத்தை அதிக வறட்சி அடையச் செய்யும். நெல்லிக்காய் சாப்பிட்ட பிறகு நிறைய தண்ணீர் குடிப்பதும் நல்லது.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்(Pregnant and lactating mothers)
நெல்லிக்காய் சில நேரங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களை பாதிக்கிறது. மருத்துவரின் பரிந்துரைப்படி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.
மேலும் படிக்க:
இந்தியாவில் மின்சார டிராக்டர் விரைவில் அறிமுகம்- நிதின் கட்கரி
Share your comments