வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. அவற்றுள் செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி, கோலிகூடு போன்ற வகைகளில் வாழைப்பழம் உள்ளது. வாழைப்பழம், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் சத்துக்களையும் கொண்டதாகும். மேலும், இது ஏழைகளும் வாங்கி உண்ணக் கூடிய வகையில் உள்ள மிக சிறந்த பழம் எனலாம். வாழைப்பழத்தின் பொட்டாசியம் சத்து, நமது தசை பிடிப்பை நீக்குகிறது.
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. ஒரு பழுத்த வாழைப்பழத்தில், மனித உடலில் சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்த, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது. எனவே மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் அற்புத நன்மைகள் என்னவென்று கீழே பார்ப்போம்.
* பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
* கற்பூரவள்ளி வாழைப்பழத்தில், அதிக அளவு செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஜீரன சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
* கற்பூரவள்ளி வாழைப்பழம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் இதில் உள்ள மேங்கனீஷ், மெக்னிஷியம் எலும்புகளை பலப்படுத்த உதவும்.
* இந்த பழம், தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது.
* உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும்.
* கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் தோலை வீணாக்காமல் அதை சிறுசிறு துண்டாக வெட்டி மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.
அதிகமானோர், காலை உணவை சரிவர எடுத்துக்கொள்வதில்லை, இது முற்றிலும் தவரான செயலாகும். அகவே, காலை உணவோடு சேர்த்து, வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், அதிக நன்மைகளை பெறலாம். இது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலை வழங்குகிறது . மேலும் பல நோய்களில் இருந்து நம்மை காக்க வல்லது. வேலை செய்யும் போது சோர்வாகவோ அல்லது மன அழுத்தம் ஏற்பட்டாலோ வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
மேலும் படிக்க:
உறைபனியில் இருந்து பயிர்களை காப்பாற்ற, இந்த பணியை செய்திடுங்கள்
உறைபனியில் இருந்து பயிர்களை காப்பாற்ற, இந்த பணியை செய்திடுங்கள்
Share your comments