1. வாழ்வும் நலமும்

மாதுளையின் பல்வேறு பயன்கள்

KJ Staff
KJ Staff

ஊட்டச்சத்து இயக்கங்களின் முன்னனியில் மாதுளை ஒரு “அதிசயப்பழம்” என்று அழைக்கப்படுகிறது. இப்பழமானது ஆரோக்கியமான மற்றும் உகந்த வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்களை உள்ளடக்கியது.

மாதுளையின் மூலம் ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் பலன்கள் :

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் :

மாதுளைப் பழத்தின் நன்மைகளில் ஒன்று இந்தப் பழத்தில் உள்ள நம்பமுடியாத அளவில் காணப்படும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) தான். மாதுளைப் பழமானது பச்சைத் தேநீர் அல்லது பசும் தேநீர் (Green tea) மற்றும் சிவப்புத் திராட்சை மதுவை (Red Wine) விட மூன்று மடங்கு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளைக் கொண்டுள்ளது. இவற்றில் மூன்று வகையான பாலிபினால்களைக் கொண்டுள்ளது. அவை நோயெதிர்ப்பு மண்டல அமைப்புக்கு ஆதரவளிக்கக் கூடியதும் மேலும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கக் கூடியதுமான அந்தொசியனின் (Anthocyanin), எல்லாஜிக் அமிலம் (Ellagic acid), மற்றும் டானின் (Tannin) போன்றவையாகும். அதிக அளவு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் பாலிபினால்கள் உடலில் நோய்கள் ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் கூறுகளைக் குறைக்கப் பயன்படுகிறது. எனவே மாதுளைப் பழத்தின் மூலம் எண்ணற்ற உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் பாலிபினால்கள் நம் உடலுக்கு நேரடியாகக் கிடைக்கின்றன.

 நார்ச்சத்து அதிகம்:

மாதுளையான கரையத் தக்க மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுக்கு மிகப்பெரிய நிறைவான ஆதாரமாக உள்ளது. இவை மென்மையான செரிமானத்திற்கும் குடல் இயக்கங்களை எளிமையாக்குவதற்கும் உதவுகிறது. 100 கிராம் மாதுளை பழம் 4 கிராம் நார்ச்சத்தினை வழங்குகிறது. இப்பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் காரணமாக எடை குறைப்புத் திட்டங்களில் ஊட்டச்சத்து நிபுணர்களால் இப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் உடலைப் போதுமான அளவில் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆரோக்கியமான நன்மைகளை அனுபவிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு குவளை மாதுளைப் பழச்சாறு அல்லது நடுத்தர அளவிலான மாதுளைப் பழத்தைச் சாப்பிட்டு வர வேண்டும்.

மார்பகப் புற்றுநோய்க்குத் தீர்வு:

மாதுளைப் பழத்தில் உயிர்வளி ஏற்ற எதிர்ப்பொருளான எல்லாஜிட்டனின் (Ellagitannin) உள்ளது. இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான ஈஸ்ட்ரோஜனைத் தடுக்கிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் உருவாகுவதற்குப் பயன்படும் அரோமடேசைத் (Aromatase) தடுக்கிறது. இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபயாத்தைக் குறைக்கிறது.

கர்ப்பத்தில் உதவி:

மாதுளை பழமானது பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ‘சி’, ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்துப் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. எனவே இப்பழம் கருவுற்றப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், உயிரணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாதுளைப்பழம் பயன்படுகிறது. கர்ப்பகாலத்தின்போது பருகப்படும் மாதுளைச் சாறு தசைப்பிடிப்புகள் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கப் பயன்படுகிறது. மேலும் மாதுளைப் பழமானது குழந்தையின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் மூளை சேதத்தின் அபாயத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் மாதுளை பழத்தை உண்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

 இரத்த சோகையிலிருந்து விடுதலை:

மாதுளைப் பழங்களில் உள்ள அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையினைக் குணப்படுத்துகிறது. வழக்கமான முறையில் மாதுளைப் பழங்களை உண்பது இரத்தக் குழாய்களில் இரத்த உறைக் கட்டிகள் உருவாகுவதைத் தடைசெய்கிறது. எனவே மாதுளைப் பழங்களை உண்டு இரத்தசோகையிலிருந்து விடுபடலாம்.

செரிமான மண்டலம்:

மாதுளை பழச்சாற்றில் செரிமானத்திற்கு உதவக்கூடிய, நுண்ணுயிர்ப் பண்புகள் கொண்ட என்சைம்கள் உள்ளன. மேலும் இப்பழம் மூலநோய், குமட்டல், வயிற்றுப் போக்கு மற்றும் குடல் புழுக்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. மாதுளைப் பழச்சாற்றினை அருந்துவதன் மூலம் மலச்சிக்கலைக் குணப்படுத்தலாம். மாதுளைப் பழத்தை உண்பதனால் செரிமான மண்டலம் வழுவடைகிறது.

புரோஸ்டேட் புற்றுநோய்:

மாதுளைப் பழஙக்ள் குறிப்பிட்ட புரோஸ்டேட் ஆன்டிஜென்களைக் குறைப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. மாதுளைப் பழச்சாறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது. மாதுளைச் சாற்றில் உள்ள உயர் பைட்டோகெமிக்கல் (Phytochemical) ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பல் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு:

குறிப்பிட்ட பல் நிலைமைகளின் சிகிச்சையில் மாதுளை சிறந்த பயனளிக்கிறது. மாதுளைப் பழச்சாற்றில் உள்ள அதிக அளவு பாலிபினோல் மற்றும் பிளவனாய்டுகள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய கலவையாக இருப்பதால் வாய் துர்நாற்றத்தினை நீக்குகிறது. மேலும் சிறந்த வாய் கழுவியாகப் (Mouthwash) பயன்படுகிறது. மாதுளைப் பழச்சாற்றினைத் தொடர்ந்து குடித்து வருவதனால் பல் தகடு (Dental Plaque) உருவாகுவது தடுக்கப்படுகிறது. மேலும் மாதுளைச் சாறு பாக்டீரியாவினால் பற்களில் ஏற்படும் துவாரங்கள் மற்றும் ஈறு அழற்சியினை குணப்படுத்த உதவுகிறது. எனவே மாதுளையையும், மாதுளைச் சாற்றினையும் தினமும் பருகி, வாய் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

இதயக் குழலிய நோயிலிருந்து பாதுகாப்பு:

இதயக் குழலிய நோய் (Cardiovascular disease) அல்லது இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதுதான் இந்த அற்புதமான மாதுளைப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளில் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். தினமும் ஒரு குவளை மாதுளைப் பழச்சாறு குடிப்பது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தின் பணிச்சுமையைக் குறைக்கிறது. மாதுளை இரத்தத்தை மெலிதாக்கி தமனிகளில் தகடு ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis) ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. மாதுளைப் பழச்சாறு அருந்துவதனால் உடலில் உள்ள குறையடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பின் (கெட்ட கொழுப்பு) அளவினை மிகையடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பினை (நல்ல கொழுப்பு) பாதிக்காத வகையில் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாதுளைச் சாறு மற்றும் விதைகள் சாப்பிடுவதனால் இதயத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது.

 அல்சீமர் நோயின் எதிரி:

அல்சீமர் நோய் வளர்வதைத் தடுப்பதில் மாதுளை மிகுந்த பயனளிக்கிறது. ஒரு ஆய்வகத்தில் சில எலிகள் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. பாதி எலிகளுக்கு மாதுளைப் பழச்சாறு வழக்கமான அளவில் வழங்கப்பட்டது. மீதி எலிகளுக்குச் சாதாரண உணவு வழங்கப்பட்டது. மாதுளைச் சாறு உணவாக அளிக்கப்பட்ட எலிகள் அல்சீமர் நோய்க்கு முக்கிய பங்களிப்பாளராகக் கருதப்படும் அமிலாய்டு பிளாக்கைக் குறைந்த அளவில் உருவாக்கி இருந்தனர். மேலும் இந்த எலிகள் மனநலப் பணிகளைச் செய்வதைல் மேம்பட்ட திறனுடனும் மனபுதிர்களுக்கு சிறப்பான முறையில் பதிலளிக்கவும் செய்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

ஆஸ்டியோபோரசிஸ் எனப்படும் எலும்புருக்கி நோயினால் பதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளை உதவி செய்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் வெளியிடுகின்றன. மாதுளையில் உள்ள நொதிகள் குருத்தெலும்புகள் சேதமடைவதையும் இதனால் கீழ்வாதம் ஏற்படுவதையும் தடுக்கின்றன. மேலும் உடலில் உள்ள அழற்சியின் எதிர் விளைவுகளைத் தடுக்கிறது. இதனால் மாதுளைப் பழம் எலும்புப் புரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன் அளிக்கிறது.

புற்றுநோயை விரட்டும் மாதுளம் பழம்:

மாதுளைப் பழமானது புரோஸ்டேட் தோல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்று நோய்களுக்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாதுளையில் உள்ள உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள், புற்றுநோய்க்குக் காரணமான அடிப்படைக் கூறுகளை அழிப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

English Summary: Benefits of Pomegranate Published on: 20 November 2018, 03:34 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.