வெந்தய விதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சில கீரை வகைகள் கசப்பான (Bitterness) அல்லது துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளன. க்ரீன் டீ குடித்தால், ஒன்றல்ல, இரண்டல்ல, பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
கசப்பான உணவுகளின் பலன்கள்: தோற்றம் நன்றாக இல்லை என்றால் அதன் சுவையும் நன்றாக இருக்க முடியாது என்று அவசியமில்லை. உணவில் கசப்பான மற்றும் நாவில் சுவைக்காத விஷயங்களுக்கும் இது பொருந்தும். கசப்பான விஷயங்களால் பயனே இல்லை என்று இல்லை. சொல்லப்போனால், கசப்பான சுவை கொண்ட பல விஷயங்களில் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் பல அம்சங்கள் உள்ளன.
கசப்பான ஆனால் சத்துக்கள் நிறைந்த சில உணவு வகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பெரிதும் உதவுகின்றன.
வெந்தய விதைகள்
வெந்தய விதையின் சுவை மிகவும் கசப்பாக இருந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கரையக்கூடிய உணவு நார்ச்சத்து ஆகியவை நிறைந்தது. வெந்தய விதைகளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் இது நல்ல பங்கு வகிக்கிறது. இதனுடன், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
Also Read : அதிகாலை முதுகுப் பிடிப்பில் கவனம் தேவை!
பாகற்காய்
பாகற்காய் (Bitter Gourd) மற்றும் அதன் சாறு மிகவும் கசப்பாக இருக்கும். ஆனால் அவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறன. பாகற்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நல்ல பங்கு வகிக்கின்றன. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயின் (Green Tea) சுவை கசப்பாக இருக்கிறது. முதலில் இது குடிப்பவர்களுக்கு பிடிக்காமல்தான் இருக்கும். ஆனால் இதை குடித்தால், ஒன்றல்ல, இரண்டல்ல, பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பாலுடன் சர்க்கரை கலந்த இனிப்பு தேநீருக்கு பதிலாக, கிரீன் டீ பக்கம் மக்கள் மாறுவதற்கு இதுவே காரணம்.
கிரீன் டீ உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக உள்ளது. இதனுடன் இதை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள பாலிபினால்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.
காய்கறிகளாக உண்ணப்படும் இலைகள்
சில கீரை வகைகள் கசப்பான அல்லது துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளன. ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.
டார்க் சாக்லேட்
இளைஞர்கள் சாக்லேட் (Chocolate) சாப்பிட விரும்புகிறார்கள். எனினும், பலர் டார்க் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். ஏனெனில் டார்க் சாக்லேட் சாப்பிட மிகவும் கசப்பாக இருக்கும். ஏனென்றால், கோகோ செடியின் பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் கோகோ பவுடர் அதில் சேர்க்கப்படுகிறது.
ஆனால் கசப்பாக இருந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, பாலிபினால்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உள்ளன. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது மற்றும் வீக்கத்தின் பிரச்சனையிலும் நிவாரணம் அளிக்கிறது.
மேலும் படிக்க
நீரிழிவுக்கும் வெப்பநிலைக்கும் என்ன சம்பந்தம்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
தோள்பட்டை காயத்தை தகர்க்கும் இயன்முறை மருத்துவம்!
Share your comments