உடலுக்கு வலு சேர்க்கும் கொண்டைக்கடலையில் (Chickpeas) இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று கறுப்பு கொண்டைக்கடலை. கறுப்பு கொண்டைக்கடலை உற்பத்தியில், இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது.
பழுப்பும், கறுப்பும் கலந்த நிறத்தில் சிறியதாக இருந்தாலும், புரதம் நிரம்பியது. முதிர்ந்த கறுப்பு கொண்டைக்கடலையை, ஊறவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். உடற்பயிற்சிக்கு (Exercise) முன் ஊறவைத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவதால், உடல் பலம் பெறும். தசை உறுதிக்கு நல்லது.
கார்போஹைட்ரேட் (Carbohydrate) மற்றும் புரதங்களின் (proteins) நல்ல மூலமாக இது விளங்குகிறது. மேலும் இதிலுள்ள புரதத்தின் தரம் மற்ற பருப்பு வகைகளை விட, சிறந்ததாக கருதப்படுகிறது. கந்தகத்தைக் (Sulfur) கொண்ட அமினோ அமிலங்களைத் தவிர, அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் (Amino acids) கறுப்பு கொண்டைக்கடலை சுண்டலில், குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. இதை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
வைட்டமின்கள்:
நார்ச்சத்து, ஒலிகோசாக்கரைடுகள் (Oligosaccharides), குளுக்கோஸ் (Glucose) மற்றும் சுக்ரோஸ் (Sucrose) போன்ற எளிய சர்க்கரைகளைத் தொடர்ந்து ஸ்டார்ச் நிறைந்துள்ளது. முக்கியமான வைட்டமின்களான ரைபோஃப்ளேவின் (Riboflavin), நியாசின் (Niacin), தியாமின் (Thiamin), ஃபோலேட்(Folate), வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல நல்ல மூலாதாரங்கள் கறுப்பு கொண்டைக்கடலையில் இருக்கின்றன.
மருத்துவப் பயன்கள்:
- முளைவிட கறுப்பு கொண்டைக்கடலை துத்தநாகத்தின் ஆதாரமாகும். இது கொரோனா நோய்க்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை (Anti-Biodic) உருவாக்க உதவுகிறது.
- இதய நோய் மற்றும் செரிமான நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.
- கறுப்பு கொண்டைக்கடலையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக செரிமானிக்கப்படுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலின் (Insulin) எதிர்ப்புக்கு பங்களிக்கிறது. இதனால், நீரிழிவு நோய் (Diabetics) வரும் அபாயத்தை குறைக்கிறது.
- இரும்புச்சத்து நிறைந்த கறுப்பு கொண்டைக்கடலை, ரத்த சோகையைத் தடுக்கவும், உடனடி ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால், கர்ப்பிணி, பாலூட்டும் பெண்கள் மற்றும் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும்.
முதுமையிலும் இளமை:
சைவ உணவு உண்பவர்களுக்கு, சிறந்த புரத மூலமாக விளங்கும் கறுப்பு கொண்டைக்கடலையை, முழு தானியங்கள் அல்லது முழு கோதுமை புரதத்துடன் இணைந்து எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அவை அதிக கலோரிகள் (Calories) மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாதவை. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதால், செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. நார்ச்சத்து, குடலின் செயல்பாட்டை எளிதாக்குவதன் மூலம் மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கிறது. மலச்சிக்கலைக் குணப்படுத்த, கறுப்பு கொண்டைக்கடலையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி, அதில், இஞ்சி தூள் மற்றும் சீரகத்தை தூவி குடிக்கலாம். மேலும், கறுப்பு கொண்டைக் கடலை சருமத்திற்கும் அதிசயங்களை செய்கிறது. ஏனெனில், இதில் மாங்கனீசு (Manganese) இருப்பதால், சருமத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. முதுமைக்கு எதிராக போராட உதவுகிறது. தினந்தோறும் கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், முதுமையிலும் இளமையாய் வாழலாம். மேலும், இதில் உள்ள பி வைட்டமின்கள் (B Vitamin) உயிரணுக்களுக்கு எரிபொருளாக செயல்படுகின்றன. பெரும்பாலும், மாங்கனீசு குறைபாடு முடி வளர்ச்சியை தாமதப்படுத்தும். கொண்டைக்கடலையில் உள்ள மாங்கனீசு முடிவளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு, அதில், புரதம் நிறைந்திருப்பதால், முடி உதிர்வையும் குறைக்கும்.
உடல் எடை குறைய:
சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளின் சமீபத்திய மெட்டா பகுப்பாய்வு, ஆற்றல் நிறைந்த கொண்டைக்கடலை கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. எட்டு வாரங்களுக்கு தொடர்ந்து கொண்டைக்கடலை எடுத்துக் கொண்டால் அதிக எடை மற்றும் பருமனான நபர்களின், சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் (Systolic blood pressure) குறையும். உடலில் இருக்கும் மொத்த கொழுப்புகளில், கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவற்றின் நேர்மறையான விளைவுகளுக்கு, கரையக்கூடிய நார்ச்சத்து உதவுகிறது.
தினசரி கொண்டைக் கடலை:
கொண்டைக்கடலையின் புரத உள்ளடக்கம் மற்றும் நொதி தடுப்பான்கள் (Enzyme Inhibitors) கொண்டைக்கடலையில் உள்ள டானின்கள் போன்ற எதிர்ப்பு ஊட்டச்சத்துக்கள் ஆகியவையும், இதய நோய்களின் தீவிரத்தை ஓரளவு குறைக்க முடியும் என்பதையும் இந்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. தினசரி, கொண்டைக்கடலை உண்பதால் மலச்சிக்கல், குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும், குணமாகி விடும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
அனைவருக்கும் உணவு! தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் உறுதி!
சரியான உணவை உண்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார், நெல்லை மாவட்ட ஆட்சியர்!
Share your comments