Krishi Jagran Tamil
Menu Close Menu

நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் கொய்யா-வீடுதோறும் வளர்க்க வேண்டிய மரம்!

Wednesday, 14 October 2020 11:22 AM , by: Elavarse Sivakumar
Guava is a home-grown tree that boosts immunity!

மலிவான விலையில் கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அத்துடன், அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. அந்த வகையில் அவ்வளவாக விரும்பப்படாத பழம் கொய்யா.

அழகு, ஆரோக்கியம், மருத்துவப்பலன்கள் எனப் பலப்பரிணாமங்களில் நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய பழம் என்றால் அது கொய்யாதான். நம் முன்னோர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், கட்டுக்கோப்பான உடலமைப்புக்கும் அடித்தளம் அமைத்துக்கொடுத்தவை  பச்சை காய்கறிகளும், இயற்கையான பழங்களும்தான்.

அந்த வகையில், ஏழைகளின் ஆப்பிள் அழைக்கப்படுவது கொய்யா. மலிவு விலைக்கு விற்கப்படும் கொய்யா பெரும்பாலும் அனைத்துக்காலங்களிலும், கிடைக்கும்.

சத்துக்கள் (Nutrients)

வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மருத்துவப் பயன்கள் (Medical Benefits)

 • இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.

 • அன்றாடம் ஒரு கொய்யா சாப்பிட்டால், உடலின் சூடு தணித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

Credit : Tami Webdunia

 • தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.

 • முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும் தன்மை கொண்டிருப்பதால், கொய்யா தோல் சுருக்கத்தைக் குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமையைத் தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.

 • கொய்யா இலை தேனீர் குடித்த 12 வாரங்களில் இன்சுலின் உற்பத்தியை குறைத்து இரத்த சர்க்கரை அளவையும் உடல் எடையையும் குறைக்கிறது.

 • கொய்யாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், கட்டி வளர்ச்சியைத் தடுக்கிறது. இது பெருங்குடல், மார்பகம், வாய், சருமம், வயிறு, வாய் குழி மற்றும் நுரையீரல் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும்.

 • கொய்யா இலையைத்  தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.

 • கொய்யா இலையில் உள்ள வைட்டமின் C முகப்பரு உருவாவதைத் தடுக்கிறது.

 • கொய்யா, தோல் அமைப்புமுறையை மேம்படுத்துகிறது.கொய்யாவில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை சரிசெய்கிறது.

 • கொய்யாவில் வைட்டமின் C அதிக அளவு இருப்பதால் பற்களின் ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும்.

சிகப்பு கொய்யா உலகின் தலைசிறந்த பழம் என தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே நாம் வீடுதோறும் கொய்யா மரம் வளர்ப்போம். ஆரோக்கியத்தை நம் வசமேத் தக்கவைத்துக்கொள்வோம்.

தகவல்
அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

இவற்றில் எந்த பால் சிறந்தது? விபரம் உள்ளே!

உச்சி முதல் பாதம் வரை- எக்கச்சக்க பலன் தரும் மருத்துவ மூலிகை கிராம்பு!

எண்ணற்ற பலன்தரும் கொய்யா மலிவாகக் கிடைப்பதால் மவுசு இல்லை கொய்யாவின் மருத்துவப் பயன்கள் Guava is a home-grown tree that boosts immunity!
English Summary: Guava is a home-grown tree that boosts immunity!

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. 45 நிமிடத்தில் கடன் வழங்கும் SBI! - உங்களை தேடி வரும் சூப்பர் திட்டம்!
 2. தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
 3. ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?
 4. கோயம்புத்தூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை பற்றிய ஆய்வு!
 5. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!!
 6. முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை துறைக்கு ரூ. 5கோடி நிதி ஒதுக்கீடு!
 7. கதிர் அடிக்கும் களங்கள் இல்லாததால் விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்!
 8. கிசான் முறைகேடு : பணத்தை திரும்ப செலுத்தாவிட்டல் அரசு சலுகைகள் நிறுத்தம்!
 9. பாதுகாப்பான வாழ்க்கைக்கு பாரம்பரிய அரிசி வகைகள் !
 10. ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர் - நன்மைகள்!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.