1. வாழ்வும் நலமும்

கொளுத்தும் கோடை- தப்பிக்க என்ன வழி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Burning summer- what a way to escape!
Credit : Tamil Twin News

குளிர் உச்சம் பெற்றாலும், அதற்கான பாதுகாப்பு கவசங்களுடன் எதிர்கொள்ள முடிகிறது.அதே நேரத்தில் கோடை காலம் சற்றுக் கொடுமையானதாக, சருமம் சார்ந்த பல்வேறு நோய்களைக் கொண்டுவரும் விருந்தாளியாக உள்ளது.

தொடங்கியது கோடை (Summer has begun)

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை காலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் உள்ள தர்பூசணி மற்றும் குளிர்பானங்களை அருந்தி வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

கோடை வெயிலின் தாக்கம் மனிதனுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வது குறித்து மருத்துவர்கள் கூறும் அறிவுரை என்ன?

மருத்துவர்களின் அறிவுரைகள் (Physician's advice)

  • கோடை வெயிலில் இருந்துத் தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்த வேண்டும்.

  • வெளியில் செல்லும்போது தொப்பி அல்லது குடை, கண்ணாடி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

  • அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர், தர்பூசணி மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை நீர் ஆகியவற்றை அருந்த வேண்டும்.

  • குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்ப தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

  • வீட்டில் பகல் நேரங்களில் திரைச்சீலைகள், கூடாரங்கள், மறைப்பான்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்தும் காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்குமாறும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

  • வெட்ட வெளியில் பணியாற்றுபவர்கள் ஈரமான உடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

    கடும் வெயில் நேரத்தில் (மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை) சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும்.

  • கால்நடைகளை (ஆடு, மாடு) நிழலில் வைத்துப் பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும்.

  • வெயில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்கவும்.

  • அடர் வண்ணம் கொண்ட (குறிப்பாக கருமை வண்ண) ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது.

  • வெயிலில் கடுமையான பணிகளை செய்யக்கூடாது.

  • உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீர் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக்கூடாது.

  • உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழவகைகளை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த அறிவுரைகளை மனதில் நிறுத்தி செயல்பட்டால், கோடைகால நோய்களில் இருந்தும், அதிக வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.

மேலும் படிக்க....

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!

சந்தையில் விற்பனையாகும் போலி இஞ்சி- கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!

பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

English Summary: Burning summer- what a way to escape! Published on: 10 March 2021, 10:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.