1. வாழ்வும் நலமும்

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடலாமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Can diabetics eat sweet potato?
Credit : Tamil Webdunia

சர்க்கரைவள்ளிக் கிழங்கில், சர்க்கரை நோய் வராமல்தடுக்கும் குணம் இருப்பதால், இதனை நீரழிவு நோய் உள்ளவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம் என்பது சமீபத்திய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு (sweet potato)

பள்ளிப் பருவத்தை நினைக்கும்போது, பலரும், சர்க்கரைவள்ளிக்கிழங்கை வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள்.

ஏனெனில் பள்ளிக்கூடங்களில் கூட உடல்நலத்திற்கு ஏற்றப் பொருட்களே விற்பனை செய்யப்பட்டன. அந்த வகையில் நம்மில் பலர் ருசித்தது இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

சாப்பிடலாம் (Let's eat)

ஆனால் பெயரிலேயே சர்க்கரையைக் கொண்ட இந்தக்கிழங்கை, நீரழிவுநோய் எனப்படும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்றே பலர் கூறுகின்றனர். ஆனால் அது முழுக்க முழுக்கத் தவறானது. உண்மையில் இது மாற்றான குணங்களைக் கொண்டது. இதற்கு சர்க்கரைநோயை வராமல் தடுக்கும் குணமும் உண்டு.

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் குறைந்தளவில் கிளைசெமிக் இண்டெக்ஸ் (Lower Glycemic Index) இருப்பதால், சர்க்கரைநோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம்.

இன்சுலின் சுரக்க (Insulin secretion)

அதாவது, இதைச் சாப்பிடுகிறவர்களுக்கு உடலில் இன்சுலின் சீராகச் சுரக்கவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கவும் உதவும் இந்தக் கிழங்கு.

ஆராய்ச்சிகள் (Research)

அதேநேரத்தில், இதில் உள்ள நார்ச்சத்து உணவிலுள்ள குளூகோஸை ரத்தத்தில் சேர்க்கும் வேகத்தை வெகுவாகக் குறைக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும் என்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் GI ( Glycemic Index) அளவு குறைவாக உள்ளதாகக் கருதப்படுகிறது, ஆகவே சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஏற்ற வகையில் உங்கள் உணவைத் திட்டமிடுவதிலும் இது உதவும்.

இவற்றில் அதிக நார்ச்சத்தும் உள்ளது, ஆகவே நீரிழிவுநோய் உள்ளவர்களும் தங்களது அன்றாட உணவுத் திட்டத்தில் இவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்த GI இருந்தால், அந்த உணவு உடனடியாக சிதைத்து செரிக்கப்படாது, அதாவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளை உடனடியாக அதிகரிக்காது.

மொத்தத்தில், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துகளைக் கருத்தில் கொள்ளும்போது, அதனை நாம் கொண்டாட வேண்டும் எனலாம்! எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், இதனை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவுத்திட்டம் மிகவும் முக்கியம்.

எனினும், அஜீரணம், மலச்சிக்கல், வயிறு உப்புசம் இருக்கும்போது சர்க்கரைவள்ளிக் கிழங்கைச் சாப்பிடக் கூடாது.

மேலும் படிக்க...

இன்று மெகா தடுப்பூசி முகாம்; தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்!

வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!

English Summary: Can diabetics eat sweet potato? Published on: 12 September 2021, 08:48 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.