இன்றைய நவீன யுகத்தில், சர்வ சாதாரணமாக பல்வேறு நோய்கள் நம்மை மிக எளிதாக தாக்கி விடுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், நமது உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் என்றால் அது மிகையாகாது. ஏனெனில், ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை யாரும் இப்போது சாப்பிடுவதில்லை. வயிற்றுப் பசிக்காகவும், ருசிக்காகவும் தான் சாப்பிடுகின்றனர். இதன் விளைவு தான், மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய காரணமாக அமைகிறது. இந்நிலையில், சிறு வயதிலேயே பலருக்கும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இவர்கள் உணவு முறையில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியமாகும். அவ்வகையில், சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை சாப்பிடலாமா அல்லது வேண்டாமா என்ற சந்தேகம் பலரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய உண்மைத் தகவலை இப்போது தெரிந்து கொள்வோம்.
சிவப்பு அரிசி
சிவப்பு அரிசியில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அனைவருக்கும் ஏற்ற ஒரு மிகச் சிறந்த தானியமாகவும் கருதப்படுகிறது. சிவப்பு அரிசியில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி இது பாரம்பரிய உணவும் கூட. இது மிகவும் வலுவானது. மற்ற அரிசி ரகங்களை விடவும் அதிக சத்துக்களை கொண்டது. சிவப்பு அரிசியை சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக சர்க்கரை வியாதியை குறைப்பதாக சொல்லப்படுகிறது. உண்மையாகவே இது, சர்க்கரை நோயை குறைக்க உதவுகிறதா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சிவப்பு அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதா?
சிவப்பு அரிசியில் அதிகளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது நீரிழிவை அதிகரிக்கச் செய்யாது. சாப்பிட்ட உடனே உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையை கலக்காமல், மிகப் பொறுமையாக கலக்கும். இதன் காரணமாக சர்க்கரையின் அளவு அதிகரிக்காது என கூறப்படுகிறது.
சிவப்பு அரிசியின் நன்மைகள்
சிவப்பு அரிசியை சாப்பிட்டு வந்தால், டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க முடியும். இதில் இருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையை செய்யக் கூடியது.
சிவப்பு அரிசியை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. இருப்பினும், வயிற்றுப்புண் மற்றும் உள் மூலம் பிரச்சனை உள்ளவர்கள் சிவப்பு அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில், பாலிலேயர் இருந்தால் அது வெளியேறும் போது மூலக்கட்டியை கீறி விட வாய்ப்புள்ளது. இதைத் தவிர வேறு எந்தவிதமான பக்க விளைவுகளையும் உண்டு செய்யாது.
மேலும் படிக்க:
Share your comments