பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து நீண்டகாலமாக அரியர் வைத்திருக்கும், முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத் தேர்வு எழுத உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தேர்வு எழுத வாய்ப்பு (Opportunity to write the exam)
பட்டயக் கல்வியை முடித்து நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல்உள்ள முன்னாள் மாணவர்களுக்கு 2019-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கொரோனாவால் பாதிப்பு (Opportunity to write the exam)
இதில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் கொரோனா காரணமாகத் தேர்வு எழுதவும், தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமலும் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 4 பருவத் தேர்வுகளில் சிறப்பு அனுமதி வழங்கவேண்டும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
மேலும் இதற்கான தேர்வு கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ஆணை வழங்கவேண்டும் என்றும் தொழில்நுட்பக்கல்வி இயக்கக தேர்வு வாரியத் தலைவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மீண்டும் வாய்ப்பு (Opportunity again)
அதன்படி 2021-ம் ஆண்டு மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடைபெறும் பருவத் தேர்வுகளின்போது மட்டும் சிறப்புத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கட்டண விபரம் (Payment details)
அதேபோல, தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு தலா ரூ.65 தேர்வு கட்டணமாகவும், ஒவ்வொரு வாய்ப்புக்கும் பதிவுக் கட்டணமாக ரூ.750-ம் வசூலிக்கத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இந்தப் படிப்பில் சேர்ந்தால் லேப்- டாப் இலவசம்- மாணவர்கள் கவனத்திற்கு!
ரூ.1800க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!
Share your comments