பழங்கள் மற்றும் காய்கறிகளை சமைப்பதற்கு முன் கழுவுவது அழுக்கு, பாக்டீரியா மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்றுவதற்கான ஒரு முறையாகும். காய்கறிகளை சுத்தம் செய்ய வினிகர் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் பயன்படுத்தலாம், ஆனால் அவற்றை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை இப்பகுதியில் காணலாம்.
வினிகர் பயன்படுத்தும் முறை:
வினிகர் அமிலமானது சில பாக்டீரியாக்களை திறம்பட கொல்லும் மற்றும் காய்கறி, பழங்களின் தோலின் மேற்பகுதியிலுள்ள பூச்சிக்கொல்லி எச்சங்களை அகற்றும் தன்மைக்கொண்டது. வினிகரைப் பயன்படுத்த, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- ஒரு கிண்ணத்தினை எடுத்துக்கொண்டு அதனை நீரால் நிரப்பவும்.
- 3 பாகங்கள் தண்ணீரில் 1 பகுதி வினிகர் கரைசலை சேர்க்கவும்.
- காய்கறிகளை வினிகர் கரைசலில் சுமார் 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- வினிகர் சுவையை நீக்க சுத்தமான ஓடும் தண்ணீரில் காய்கறிகளை நன்கு கழுவவும்.
பேக்கிங் சோடாவினால் கழுவும் முறை:
பேக்கிங் சோடா காரமானது மற்றும் காய்கறிகளில் உள்ள அழுக்கு மற்றும் குப்பைகளை அகற்ற பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் அதை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்.
- ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதனை நீரால் நிரப்பவும்..
- தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து, கரையும் வரை கிளறவும்.
- காய்கறிகளை தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் ஊற விடவும்.
- காய்கறிகளை ஒரு தூரிகை அல்லது உங்கள் கைகளால் மெதுவாக தேய்த்து அழுக்கு அல்லது எச்சத்தை அகற்றவும்.
- பின்னர் காய்கறிகளை சுத்தமான ஓடும் தண்ணீரில் கழுவவும்.
உப்புக்கரைசல் பயன் தருமா?
பழம், காய்கறி உற்பத்தி பொருட்கள் சிலவற்றை உப்பு நீர் கரைசலில் ஊறவைப்பதும் பயன் தரும். இது பழத்தின் மேற்பரப்பில் இலைகள் அல்லது துளைகளில் தேங்கி நிற்கும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது. ஹிமாலயன் உப்பு இதற்கு சிறந்தது என்று கூறப்படுகிறது.
தண்ணீருடன் கலந்த உப்பு கரைசலில் 10-15 நிமிடங்களுக்கு உற்பத்தி பொருட்களை ஒரு கிண்ணத்தில் முழுமையாக மூழ்கி வைக்கவும். பின்னர் அதனை பஞ்சு இல்லாத துணியினை கொண்டு துடைத்து ஓடும் நீரில் ஒரு முறை கழுவி பயன்படுத்த துவங்கலாம்.
கீரை போன்றவற்றை சமைப்பதற்கு முன் இலைகளை பிரித்து தண்ணீரில் ஊறவைத்து அழுக்கு அல்லது குப்பைகளை அகற்றி அதன்பின் பயன்படுத்தலாம். ஆப்பிள்கள் அல்லது வெள்ளரிகள் போன்ற உறுதியான தோலினை கொண்ட காய்கறி, பழங்களுக்கு நீங்கள் ஒரு காய்கறி தூரிகையைப் பயன்படுத்தி தோலின் மீதான எச்சம் அல்லது மெழுகுகளை நீக்கலாம்.
அனைத்து காய்கறி மற்றும் பழத்தின் தோலினை நீக்கி உண்ண வேண்டும் என்பது தவறான கருத்து. ஏனென்றால் சில காய்கறி மற்றும் பழங்களில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அவற்றின் தோலில் தான் உள்ளது, எனவே அதனே அப்படியே விடுவது நல்லது என்பதை நினைவில் கொள்க.
மேலும் காண்க:
ரேஷன் கார்டுக்கு 2 பழ மரக்கன்று- சரியா வளர்க்கலனா சிக்கல் வேற..
Share your comments