தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு தாமதிப்பதால் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தளர்வில்லா ஊரடங்கு (Relaxing curfew)
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனாப் பரவல், தளர்வில்லா ஊரடங்கு காரணமாக நாளுக்குள் நாள் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்கத் தடுப்பூசி போடும் பணிகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழகத்தில் கொரோனாத் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் கையிருப்பு தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம் (Consultative meeting)
இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது
தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு தாமதிப்பதால் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது.
பணம் செலுத்தியாச்சு (Payment)
தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு பணம் செலுத்திய பிறகும் தடுப்பூசி விநியோகம் தாமதமாகிறது.
பொதுமக்களிடையே ஆர்வம் (Curiosity among the public)
தடுப்பூசி போட பொதுமக்கள் தற்போது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தடுப்பூசி இல்லாததால், ஜூன் 3 முதல் 5 வரை தடுப்பூசி போட முடியாது. ஜூன் 6இல் முதல் கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும்.
96.10 லட்சம் தடுப்பூசிகள் (96.10 lakh vaccines)
தமிழகத்திற்கு இதுவரை 96.10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 87.70 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நாளையோடு தடுப்பூசி இருப்பு தீர்ந்துவிடும்.
உலகளாவிய டெண்டர் கேட்டுள்ளோம். ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது.
2வது வாரத்தில் (In the 2nd week
ஜூன் 2வது வாரத்தில் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும். அதன்பிறகு தடுப்பூசிப் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!
Share your comments