ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோது, மஞ்சளுக்கு ஊடுபயிராக மிளகாயை சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் ஈட்டுகின்றனர்.
மஞ்சள் (Turmeric)
மங்கல நிகழ்ச்சிகள் என்றாலே, அங்கு நிச்சயம் மஞ்சளின் வாசமும், நேசமும் இல்லாமல் இருக்காது. திருமணம் முதல் கோவில் விஷேசங்கள் வரை, மஞ்சளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமே பெரிது.
மூலப்பொருள் (Ingredient)
மஞ்சள் பெரும்பாலும், மற்றப் பயன்பாட்டைக் காட்டிலும், மசாலாப் பொடி தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளாகவும், இன்றியமையாததாகவும் விளங்குகிறது.
10 மாதப் பயிர் (10 month crop)
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. 10 மாத பயிரான மஞ்சள், கடந்த காலங்களில் திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
விலை சரிவு (Price decline)
சில ஆண்டுகளுக்கு முன் குவிண்டால் ரூ.10,000க்கு மேல் விற்பனையான மஞ்சள் தற்போது ரூ.6,000, ரூ.7,000 ஆயிரம் என விற்பனையாகிறது. இதனால் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற நிலை உள்ளது.
ரூ.1.50 லட்சம் வரை (Up to Rs 1.50 lakh)
ஒரு ஏக்கர் மஞ்சள் பயிரிட விதை மஞ்சளுக்கு ரூ.30,000, குப்பை உரம் மற்றும் உழவு கூலி ரூ.40,000, மஞ்சள் வெட்டுக் கூலி ரூ.30,000, மஞ்சளைப் பாலிஸ் செய்ய ரூ.20,000 என ரூ.1.30 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சம் வரை செலவாகிறது.
சாகுபடி குறைந்தது (Price decline)
இருந்தபோதிலும் சராசரியாக 2 முதல் 2 1/2 டன் வரை மஞ்சள் விளைச்சல் கொடுக்கிறது. நோய்த் தாக்குதல் இல்லாமல் தரமான மஞ்சளாக இருந்தால் மட்டுமே மஞ்சள் சாகுபடியில் போட்ட முதல் கிடைக்கும் என்ற நிலையால் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியைக்கைவிட்டு விட்டனர்.
இருப்பினும் பல்லடம் அருகே உள்ள காளிநாதம் பாளையத்தில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகுபடி நடைபெற்று வருகிறது.
1 டன் வரை மகசூல் (Yield up to 1 ton)
மஞ்சள் சாகுபடியில், உள்ள வருவாய் இழப்பைச் சரிக்கட்ட ஏதுவாக ஊடுபயிராக மிளகாய் பயிரிடப்படுகிறது. நடப்பட்ட 60 நாட்கள் முதல் காய்ப்புக்கு வரும் மிளகாய் ஏக்கருக்கு சுமார் 1 டன் வரை மகசூல் கிடைக்கும்.
மிளகாய் நாற்று, நடவு கூலி, அறுவடைக் கூலி, உள்ளிட்டவை போக ஏக்கருக்கு சுமார் ரூ.10,000 வருவாய் கிடைப்பதால் மஞ்சள் பயிருடன் ஊடுபயிராக மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
Share your comments