சர்க்கரை நோயை குணப்படுத்த டி5 சூரணம் ஆராய்ச்சி முடிந்து தயார் நிலையில் உள்ளதாக உத்தமபாளையம் கல்லூரியில் நடந்த சித்த மருத்துவ கருத்தரங்கில், புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குனர் ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.
சர்க்கரை வியாதி (Diabetes)
ராஜேந்திரகுமார் பேசுகையில், கொரோனா உச்சபட்சமாக இருந்த போது கபசுர குடிநீர், அமுக்ரா மாத்திரைகள், நெல்லிக்காய் லேகியம் குணமடையும் சதவீதத்தை அதிகரிக்க உதவியது. தற்போது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் சித்த மருந்துகள், தொற்று நோய் தடுப்பில் சித்த மருந்துகளின் பங்கு பற்றிய விரிவான ஆராய்ச்சி நடக்கிறது. சர்க்கரை நோய்க்கான மருத்து பற்றி ஆராய்ச்சிகள் செய்து டி5சூரணம் தயார் நிலையில் உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
டாக்டர் லாவண்யா பேசுகையில், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள், தாதுப் பொருள்கள், கடற்படு திரவியங்கள், வெளி மருந்துகள் 32, உள் மருந்துகள் 32 பற்றியும், வெளி மருந்துகளில் புகை, ஒற்றடம், நீராவி குளியல், வேது பிடித்தல் பற்றியும் விளக்கினார்.
டாக்டர் ரத்னமாலா பேசுகையில், நோய் எதிர்ப்பாற்றலை மாற்றியமைக்கும் சித்த மருந்துகள், ஆய்வுகள் பற்றி பேசினார். மற்றும் டாக்டர் சிராசுதின் பேசினார். கல்லூரி தாளாளர் எம். தர்வேஷ் முகைதீன், முதல்வர் எச்.முகமது மீரான் பங்கேற்றனர். பேராசிரியர் பைசல் ஒருங்கிணைத்தார்.
மேலும் படிக்க
உடல் சூட்டைக் குறைக்கும் சப்ஜா விதைகளின் ஆரோக்கியப் பயன்கள்!
Share your comments