1. வாழ்வும் நலமும்

ஒரு ஆப்பிள்… இத்தனை நன்மைகளா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
daily An apple… So many benefits? daily

எந்த சீசனாக இருந்தாலும், மக்களுக்கு நன்மை செய்வதில், ஆப்பிள் பழத்தின் பங்கு இன்றியமையாதது. அதனால்தான், வருடத்தில் எந்த சீசன் வந்தாலும் இந்தப் பழத்தின் தேவையும் அதிகமாக இருக்கிறது. இது நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி மற்றும் பெரியவர்களால் அடிக்கடி பரிந்துரைக்கப்படுகிறது. 

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் மருத்துவ உபாதைகள் வராமல் முற்றிலுமாக தவிர்க்கலாம் என்று பெரியவர்கள் கூறியதை நாம் கேட்டிருப்போம். ஏனெனில், இந்தப் பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமான அமைப்புகளை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

அமோக ஊட்டச்சத்து

ருசியான மற்றும் ஜூசி ஆப்பிள்களில், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமே இருக்கிறது.

பல நோய்களுக்கு டாட்டா

அவை பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் மற்றும் பல வகையான புற்றுநோய்களில் இருந்து நம்மைத் காப்பாற்றுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆப்பிள் ஒரு சிறந்த பழம் என கருதப்படுகிறது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளில் நிவாரணம் தருவதில் ஆப்பிள் முக்கியப் பங்கு ஆற்றுகிறது. இரண்டு வயிற்றுப் பிரச்சனைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை என்றாலும், இரண்டு நிகழ்வுகளிலும் வேலை செய்யும் வகையிலான நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது.

சத்துக்கள்

ஆப்பிள்கள் கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்தால் ஆனது – 64% கரையாதது, 36% கரையக்கூடியது. கரையக்கூடியது, உங்கள் மலத்தில் ஒரு ஜெல் போன்ற நிலைத்தன்மையை உருவாக்குகிறது, எனவே பழத்தின் உட்புறக் கூழ், பழத்தின் சதை செரிமானத்தை மெதுவாக்குகிறது. எனவே, உங்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்தால் இவை அதற்கு சிறந்த உணவாக அமையும்.

ஆப்பிளில் உள்ள கரையாத நார்ச்சத்து கடினமான மலம் அல்லது குடலை சுத்தம் செய்வதில் சிரமம் உள்ளவர்களுக்கும் உதவுகிறது. உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், ஆப்பிள் தோலை உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.

ஊட்டச்சத்தில் ஒன்று ஆப்பிள் பழத்தின் தோலில் அதிகமாக உள்ளது. அதனால் மலத்தின் பெரும்பகுதியை அதிகரிக்கிறது மற்றும் குடல் வழியாக விரைவாகச் செல்ல உதவி மலச்சிக்கலைப் போகச் செய்கிறது.

மேலும் படிக்க...

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாடப் பழக்கங்கள்!

நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்!

English Summary: daily An apple… So many benefits? daily Published on: 12 June 2022, 04:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.