1. வாழ்வும் நலமும்

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாடப் பழக்கங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Daily Habits That Cause Cancer!

உயிர் குடிக்கும் நோய் என வருணிக்கப்படும் நோய்களில் புற்றுநோய் மிக முக்கியமானது. இதைக் கருத்தில்கொள்ளாமல் நாபம் செய்யும், ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.

ஆய்வு அறிக்கை

உடலின் எந்தப் பகுதியிலாவது செல்களின் வளர்ச்சி கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிப்பது புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது. 10 இந்தியர்களில் ஒருவர் வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை எதிர் கொள்வதாகவும், 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றைத் தெரிந்துவைத்துக்கொண்டு, அவற்றில் இருந்து விடுபடுவோம்.

புகையிலை

சிகரெட் பிடிப்பது மட்டுமின்றி வெற்றிலை பாக்கு உட்கொள்வது, சுருட்டு, பீடி பிடிப்பது நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தொண்டை வழியாக வயிற்று பகுதிக்கு சென்றடைந்து ஓசோபேஜியல் எனும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும். புகையிலை பயன்படுத்துவது குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, தொண்டை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல், கருப்பைவாய் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

அதிக காரம்

உணவை அதிக சூடாகவோ, அதிகக் காரமாகவோ சாப்பிடக்கூடாது. காரமான, சூடான உணவுகளை அதிகமாக உட்கொள்வது நுரையீரல், வாய், வயிற்றுப்பகுதியில் புற்றுநோய் உருவாக வழிவகுக்கும். உணவில் காரத்தன்மை கொண்ட மசாலாக்களை அதிகம் சேர்ப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

தாய்ப்பால்

தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதோ அல்லது மிகவும் குறைவாக கொடுப்பதோ புற்றுநோய்க்கு திறவுகோலாக மாறிவிடும். எனவே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

சூரிய வெளிச்சம்

உடலில் சூரிய வெப்பம் அதிகமாக படர்வது செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கும் வித்திடும். 18 வயதுக்குட்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகுவது பாதிப்பை அதிகப்படுத்திவிடும். தீக்காயங்கள், எக்ஸ்ரே கதிர்களின் வெளிப்பாடு, சில வேதிப்பொருட்களின் தாக்கத்தால் சருமத்தில் வடுக்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுக்கும், சரும புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் மதிய வேளையில் சூரிய ஒளி அதிகம் உடலில் படர்வதை தவிர்ப்பது நல்லது.

மது அருந்துவது

உடல் இயக்கம் இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது, உடலில் கொழுப்பு அதிகரிப்பது, மது அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் மதிப்பீடு செய்துள்ளது. உடற்பயிற்சி செய்யாதது, அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற காரணங்களால் நிறைய பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

மேலும் படிக்க...

ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம் படமா?

தமிழகத்தில் புது வைரஸ் - அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!

English Summary: Daily Habits That Cause Cancer! Published on: 07 June 2022, 06:44 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.