இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பிரச்சனையாக இருபபது தூக்கம் ஒன்று தான். இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது உடலுழைப்பு இல்லாமல் போவது மற்றும் முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் மட்டுமே. இதனால், பலரும் இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.
தூக்கமின்மை
ஒருசில குறி்ப்பிட்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு, இரவில் தூங்கச் சென்றால் தூக்கம் தடைபடாமல் இருக்கும். ஆனால், அதுவே தூக்கத்தை தடைசெய்கின்ற உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால், தூக்கம் வராமல் அவதிக்குள்ளாக வேண்டியிருக்கும். நமது தூக்கத்தை கெடுக்கும் உணவுப் பொருட்கள் என்னென்ன என்பதனையும், அதனை ஏன் இரவு நேரங்களில் சாப்பிடக் கூடாது என்பதனையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாத உணவுகள்
இரவு நேரத்தில் தேநீர், காஃபி, சோடா, சாக்லேட் மற்றும் சாக்லேட் மில்க் போன்றவற்றினை குடிப்பதை தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால், சோடா போன்ற பானங்களில் கோஃபைன் இருப்பதால், இது மூளையைப் பாதிப்படையச் செய்வதுடன், தூக்கத்தையும் கெடுத்து விடும்.
இரவில் கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும், நெய் மற்றும் வெண்ணெய் இவற்றையும் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் ஒமேகா 3 போன்ற கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதனால் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
மைதா போன்ற உணவுப் பொருட்களை இரவு நேரத்தில் சாப்பிட கூடாது.
நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா ஆகியவற்றை இரவு நேரத்தில் எடுத்துக் கொண்டால், தூக்கம் பாதிக்கப்பட்டு, செரிமானப் பிரச்சினைகளும் ஏற்படும்.
ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள கூடாது. இவை தூக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆனால் வைட்டமின் K, கால்சியம், இரும்பு, வைட்டமின் D மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்களை தவறாமல் எடுத்துக் கொண்டால் தூக்கத்தில் பிரச்சனையே வராது.
இரவு உணவை சாப்பிட்ட பிறகு, உடனே உறங்க செல்லக் கூடாது. சாப்பிட்டதும் சிறிது நேரம் கழித்து தான் தூங்கச் செல்ல வேண்டும். சாப்பிட்டவுடனே தூங்க சென்று விட்டால் அது கொடிய புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.
மேலும் படிக்க
பூண்டு தண்ணீரை தினமும் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Share your comments