நம்முடைய கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சில வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. நாம் சுவையாக துரித உணவாக இருக்கும் என எடுத்து வரும் உணவுகள் அனைத்தும் நம் கல்லீரலை பெருமளவில் பாதிக்கிறது. கல்லீரல் (Liver) தான் நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பாகும். ஏனெனில் இது நிறைய 500 க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் தான் உடலுக்கு தேவையான புரோட்டீன்கள் (Proteins), கொலஸ்ட்ரால், விட்டமின்கள் (Vitamins), தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை (CarboHydrates) உடைத்து குடலானது அதை உறிஞ்ச உதவுகின்றன. மேலும் கல்லீரல் மெட்டா பாலிசம் செயல் மூலம் ஆல்கஹாலில் உள்ள நச்சுக்கள் மற்றும் ஹீமோகுளோபினை (Hemoglobin) உடைத்து பிலிருபின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது. எனவே இப்படி ஏகப்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றிற்கு நீங்கள் சில வகை உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது.
நோய்க் கட்டுப்பாடு
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, 4.5 மில்லியன் அமெரிக்கர்களுக்கு கல்லீரல் நோய் (Liver Disease) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு கொழுப்பு அல்லாத கல்லீரல் நோய் இருப்பது 20 சதவீதம் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நம் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க முதலில் ஆல்கஹாலில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
கார்பனேட்டேடு சர்க்கரை பானங்கள்
இன்று இளைஞர்கள் குடிக்கும் முக்கால் வாசி பானங்கள் (Cool drinks) கல்லீரலை பாதிக்கக் கூடியதாக உள்ளது. சோடா மற்றும் ஆல்கஹால் (Alcohol) போன்ற பானங்களை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். காரணம் நம் சிறு குடலால் குறைந்த அளவிலான பிரக்டோஸை (Fructose) மட்டுமே கையாள முடியும். எனவே அதிகமான பிரக்டோஸ் எடுப்பது நம் கல்லீரலை பாதிக்கும்.
ஆனால் சோடா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்பனேட்டேடு பானங்களில் அதிகளவு சர்க்கரை காணப்படுகிறது. எனவே இந்த அதிக சர்க்கரை கலந்த பானங்களை விடுவது உங்க கல்லீரலுக்கு நல்லது.
அதிக சர்க்கரை
சர்க்கரைவுப் பொருட்களில் அதிகப்படியான சர்க்கரை இருப்பது தெரியாது. அதுவும் உங்க கல்லீரலுக்கு மிகுந்த சேதத்தை (Damage) உண்டாக்கும். கெட்ச்அப், சாலட் டிரஸ்ஸிங் போன்றவற்றில் அதிகமாக சர்க்கரை சேர்ப்பது நம்மளுக்கு தெரிவதில்லை. இதுவும் கல்லீரலை அதிகளவு பாதிக்கிறது.
பிரஞ்சு ப்ரை
பிரெஞ்சு ப்ரை போன்றவை அதிக கலோரிகளை (Calories) கொண்டு இருப்பதால் அவற்றை சீரணிக்க கல்லீரலால் முடிவதில்லை. ஏனெனில் பிரெஞ்சு ப்ரையில் நிறைவுற்ற கொழுப்புகள் (Fat) நிறைய உள்ளன. இவை கல்லீரலில் கொழுப்பு மற்றும் இன்சுலின் (Insulin) எதிர்ப்பை உண்டாக்குகிறது.
தவிர்க்க வேண்டியவை:
கல்லீரலைப் பாதுகாக்க கீழ்க்கண்ட சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- வொயிட் பிரட்
- டெலி இறைச்சிகள்
- வெஜிடபிள் எண்ணெய்
கல்லீரைப் பாதுகாக்க:
புகைப்பழக்கம் மற்றும் மதுப் பழக்கத்தை கைவிட்டு, காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். தினந்தோறும் யோகா பயிற்சி செய்வது இன்னும் சிறப்பு.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!
பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்
Share your comments