1. வாழ்வும் நலமும்

பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது

T. Vigneshwaran
T. Vigneshwaran
Health

தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் வாழைப் பழத்துக்கு தனி இடம் உண்டு. அதேபோன்று பாலுக்கும் முக்கிய இடமுண்டு. ஆனால் இவை இரண்டும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாம்.

உணவிற்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது நம் முன்னோர்களின் வழக்கம். இதன்மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி, சிறுவயதில் பாலுடன் வாழைப்பழத்தை சிறிதளவு சேர்த்து சாப்பிடுவார்கள். வாழைப்பழ மில்க் ஷேக் மற்றும் இனிப்புகள் இப்போது மிகவும் பிரபலமாக உள்ளன. வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாகச் சாப்பிடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள், பாடி பில்டர்கள் போன்றோருக்கு விரைவான காலை உணவு விருப்பங்கள் தேவை. அப்படிப்பட்டவர்களுக்கு எளிதில் செய்யக்கூடிய உணவு பால் மற்றும் வாழைப்பழம் தான். இயற்கையாகவே எடை அதிகரிக்க அல்லது தசை உறுதியாக விரும்புபவர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக சாப்பிடுவது பசியை போக்கினாலும், ஆயுர்வேதத்தின்படி இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்பட்டுள்ளது.

பாலில் கால்சியம், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் வைட்டமின் பி உள்ளது. வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை அனைத்துமே மனித இயக்கத்துக்கு தேவை தான் என்றாலும், இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்னை தோன்றலாம். ஒருசிலருக்கு தூங்குவது கூட பிரச்னையாக உருவாகலாம். பால் குடித்த பிறகு வாழைப்பழம் சாப்பிட விரும்பினால், குறைந்தது 20 நிமிடங்கள் வரை காத்திருப்பது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆயுர்வேதத்தில், ஒவ்வொரு உணவும் சுவை மற்றும் செரிமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரைப்பைக்கு சரியான உணவுகள் அவசியம். அப்போது தான் உங்களுடைய ஜீரண மண்டலம் ஒழுங்காக செயல்படும். பாலும் வாழைப்பழமும் ஒன்றுக்கொன்று ஊட்டச்சத்து குறைபாட்டை நிரப்புகின்றன. இவற்றை உட்கொள்வதால் செரிமான அமைப்பில் அழுத்தம் ஏற்படுகிறது. இதுதெரியாமல் தொடர்ந்து இரண்டையும் சாப்பிட்டு வந்தால், வயிற்று வாயு, சைனஸ் நெரிசல், சளி, இருமல், உடலில் தடிப்புகள், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

மேலும் படிக்க:

Electric Nano: புதிய அவதாரத்துடன் மீண்டும் களமிறங்கும் Nano Car

இலவச பசு மாடுகளுடன் பராமரிப்புக்கு 900 ரூபாய் கிடைக்கும்

English Summary: Do not eat milk and banana together Published on: 08 December 2022, 06:10 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.