அத்திப்பழத்தை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஒன்று, இரண்டல்ல பலவிதமான பிரச்சனைகள் எழுகின்றன. எனவே அத்திப்பழத்தை அளவாக மட்டுமே உண்ண வேண்டும். அதிகமாகச் சாப்பிடக் கூடாது. அத்திப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
அத்திப்பழங்கள் மிகவும் சூடாக இருக்கும். உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் அத்திப்பழத்தை அதிகமாக உட்கொள்வது இரத்தப்போக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கூடுதலாக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வாயு பிரச்சனை (Gas Problem)
அத்திப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் வாயு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பழங்களில் கலோரிகள் அதிகம். அத்திப்பழம் சாப்பிட்டால் விரைவில் வயிறு நிரம்புகிறது.
வயிற்று பிரச்சனை (Stomach problems)
அத்திப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் குடல் பாதிக்கப்படும். அதிகமாக உட்கொண்டால் குடலில் வீக்கம் ஏற்படலாம். அதிக அளவு அத்திப்பழங்கள் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ரத்த சர்க்கரை அளவு (Blood sugar range)
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதோடு சர்க்கரை மாத்திரைகளோடு அத்தியும் சேர்ந்து எடுத்துகொண்டால் அது வேகமாக ரத்த சர்க்கரை அளவை குறைக்க வாய்ப்புள்ளது.
எலும்பு பிரச்சினை (Bone Problems)
அத்திப்பழத்தில் ஆக்சலேட் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சும். இதனால் உங்கள் உடலில் உள்ள கால்சியம் குறைகிறது. குறைந்த அளவு கால்சியம் ரத்த சர்க்கரை அளவை எலும்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சிறுநீரகக் கல் (Kidney Stone)
ஏற்கனவே சிறுநீரகக் கல் மற்றும் பித்தப்பையில் கல் இருப்பவர்கள் அத்திப்பழத்தை எடுத்துகொள்வதன் மூலம் மேலும் மோசமான பாதிப்பை அடைவார்கள். அதற்காக அத்திப்பழத்தை சாப்பிடக்கூடாது என்றில்லை, அளவாக சாபிட்டால் நல்லது.
மேலும் படிக்க
இனிக்கும் சர்க்கரையின் கசப்பான தீமைகள்!
ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்கும் பனங்கிழங்கின் அற்புதப் பலன்கள்!
Share your comments