நம்மில் பலரும் அத்தி மரம் பற்றி கேள்வி பட்டிருப்போம், அதன் பழம் நமது உடலுக்கு நன்மை செய்யும் என்று. மேலும் இந்து மதத்தில் இந்த மரத்தை குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு ஓர் முறை தரிசனம் தரம் அத்தி வரதர் இந்த மரத்தினால் செய்துள்ளனர். அது மட்டுமல்லாது மரத்தின் வேர் முதல் நுனி வரை நமக்கு அழகும், ஆரோக்கியமும் ஒரு சேர தர வல்லது.
அத்தி மரம்
காணாமல் பூ பூக்கும் கண்டு காய்காய்க்கும் அது எது? விடை தெரியுமா? சிறு வயதில் நாம் போட்ட விடுகதைகளில் இதுவும் ஒன்று... ஆம் அது அத்தி மரம் தான். இதன் பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது ஆனால் அடி முதல் கிளை எல்லாவற்றிலும் கொத்துக் கொத்தாகக் காய் காய்க்கும். பழத்தின் சுவையை பொறுத்தவரை துவர்ப்பும் இனிப்பும் கொண்டது.
அத்தி மர மூலகூறுகள்
அத்தி மரத்தில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள், பட்டையில், செரில்பெஸ்ரஹென்னேட், லுப்பியால், எ-அமிரின் மற்றும் 3 இதர கூட்டுப் பொருடகள், ஸ்டீரால் மற்றும் க்ளானால் பழத்திலும், பீட்டா சிஸ்ஸடீரால் இலைகளிலும் உண்டு. இதனை விதை மற்றும் பதியம் மூலம் செய்யபட்டு வருகிறது.
அத்தி பழம் (50gm)
50gm அளவிலான பழத்தில் ஒளிந்திருக்கும் நன்மைகள்
நார்ச்சத்து: 5.8%
பொட்டாசியம்: 3.3%
மாங்கனீசு: 3%
விட்டமின் பி6: 3%
கலோரி(37): 2%
நாம் அறிய வேண்டிய அத்தி மர தகவல்கள்
- அத்திப் பிஞ்சினை நாம் சமைத்து சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு, வயிற்றுக் கடுப்பு, இரத்த மூலம் என அனைத்தும் காணாமல் போகும்.
- நீரிழிவு நோயினால் உண்டாகும் அதிகப்படியான தாகம், நாவறட்சி, உடல் சூடு போன்றவற்றை நிக்கும். மேலும் நீரிழிவினால் உண்டாகும் புண்கள் போன்றவற்றை நீக்க வல்லது.
- அத்திப் பழத்தில் பொட்டாசியம் சத்து மற்றும் நார்ச் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுவதுடன், உடல்பருமனும் குறைகிறது.
- அத்தி இலையைச் சாற்றினை தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன், சிலவகை புற்று நோய்களை தடுக்கும் என்று கண்டுபிடித்துள்ளார்கள். இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்டா (anti oxidant) ஆக செயல் படுகிறது.
- எலும்பு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் அத்தி பழம் முற்றுப்புள்ளி வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? அத்திப்பழத்தில் கால்சியம் சத்து அதிகமுள்ளது.எனவே தினமும் இரவு 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான எலும்பு பிரச்சனைகள் தீரும்.
- உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கும். முதுமையின் காரணமாக ஏற்படும் பார்வை கோளாறுகளையும் சரி செய்யும்.
- அத்திப்பழத்தை நேரடியாகவோ, தேனில் ஊற வைத்தோ, உலர்த்திப் பொடி செய்தோ சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாவதுடன் ஆண்மை ஆற்றல் பெறும், மலட்டு தன்மை அகலும்.
- உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்கள் இரவில் 2 முதல் 3 அத்திப்பழங்களை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு உடல் எடை குறையும்.
- மரத்தின் பட்டை சிறந்த மருந்தாகும், இதன் பட்டைகளை நன்கு உலர்த்தி பொடியாக செய்து காலையில் தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் வாத நோய், மூட்டு வலி என அனைத்தும் மட்டுப்படும். எந்த நிலையில் உள்ள புண்களாக இருந்தாலும் வெளி மருந்தாக இதனை பயன்படுத்தலாம்.
-
முகப்பரு மற்றும் மருக்கள் நீங்க அத்திப்பழத்தினை அப்படியே நசுக்கி சாறுடன் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருந்து பின் காய்ந்தவுடன் முகத்தினைக் கழுவ முகப்பரு நீங்கும்.
-
அத்திமரப்பால் மற்றும் இலைகளின் பாலினை மருக்கள் மீது தடவி வர அவை நாளடைவில் மறையும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments