Krishi Jagran Tamil
Menu Close Menu

முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டது உண்டா? 6 சிறந்த நன்மைகள்

Monday, 22 July 2019 03:44 PM
fenugreek sprouts

வெந்தயம் நம் சமையல் பொருட்களில் ஒன்றானது. நம்மில் பலர்  வெந்தயத்தை அப்படியே உட்கொண்டிருப்பீர்கள், ஆனால் அதே போல் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டது உண்டா? அதில் இருந்து கிடைக்கும் பற்றி நன்மைகள் தெரியுமா?

முளைகட்டிய வெந்தயத்தின் சிறந்த நன்மைகள்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இதயம்

முளைகட்டிய வெந்தயம் உடலில் கெட்ட கொழுப்புகளை சேரவிடாமல் ரத்தத்தின் செயல்பாட்டை சீராக வைக்கிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எளிதில் நேராது.

benefits of fenugreek sprouts

சருமம்

முளைகட்டிய வெந்தயம் சருமத்தில் உள்ள அணைத்து செல்களையும் தூண்டுவதால் அவை பாதிப்படையாமல் இருக்கின்றன. இதனால் பருக்கள், கருமை, முக சோர்வு, கரும்புள்ளிகள் அனைத்திற்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.

உடற் சூடு

வெந்தயம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை கொண்டது. இந்த முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து வயிற்று வலி, சூட்டால் ஏற்படும் பருக்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் தீரும்.

உடல் எடை

உடல் எடை, தொப்பை, அதிகம் இருப்பவர்கள் தினமும் இந்த முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறைவதை உணர்வீர்கள்.

பிரசவம்

வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் பிரசவ நேரத்தில் வழியை குறைக்கிறது, மற்றும் பிரசவத்தை எளிதாக்கிறது. ஆனால் அளவுக்கு மீறி சாப்பிட்டால் பின் விளைவுகளை நேரிடவிருக்கும். அதனால் மருத்துவரின் ஆலோசனை படி உட்கொள்ளவும்.

https://tamil.krishijagran.com/health-lifestyle/uses-of-fenugreek/

K.Sakthipriya
Krishi Jagran

 

Fenugreek Fenugreek sprouts 6 healthy benefits fenugreek benefits BP control weight loss skin care delivery heart problem body heat
English Summary: 6 awesome healthy benefits of Fenugreek sprouts : easy to make and quick result

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. நிவர் & புரெவி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
  2. Canara Bank Job offer: 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!
  3. இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5000 மானியம்!!
  4. மானித்தில் கரும்பு விவசாய இயந்திரங்கள் - சர்க்கரை ஆலை அழைப்பு!
  5. TNAUவின் புதிய பயிர் வளர்ச்சி ஊக்கி தொழில்நுட்பம்- காப்புரிமை வழங்கியது மத்திய அரசு!
  6. மழைக்காலங்களில் கால்நடைகளைக் கலங்கடிக்கும் எலிக்காய்ச்சல் - கட்டுப்படுத்துவது எப்படி?
  7. ஒரு அங்குலம் மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?
  8. சேலம் பழச்சந்தைக்கு கொய்யா வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ40 முதல் ரூ50க்கு விற்பனை!
  9. கனமழையால் ஏரி உடைப்பை சரிசெய்த விவசாயிகள்!
  10. கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதம் உயர்வு! மத்திய அரசு அனுமதி!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.