1. வாழ்வும் நலமும்

நலம் தரும் பல கனிமத்தாதுக்களை தன்னகத்தே கொண்ட ஒரே உப்பு

KJ Staff
KJ Staff
Amazing Health Benefits of Himalayan Salt

இந்துப்பு

உப்பு இல்லாமல் உணவு இல்லை. இந்தியாவில் உப்புத் தொழில் மிகத் தொன்மையானது. இந்நிலையில் ‘இந்துப்பு’ என்று கூறப்படும் பாறை உப்பானது கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு,  அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. இது மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இந்துப்பின் வரலாறு

இமய மலையின் அடிவாரப் பகுதியில் இயற்கை சீற்றத்தின் விளைவாக நிலத்தின் அடிப்பகுதியில் உப்பு படிமங்கள் புவி அழுத்தம் காரணமாக பாறைகளாக மாறின. அதை சுரங்கம் தோண்டி உப்பு பாறைகளை வெட்டி எடுத்ததினால்,  அதுவும் இமய மலைப் பகுதிகளின் அருகில் இருந்து எடுத்திருந்ததால்,  இமாலய உப்பு என்றும், இந்திய உப்பு என்றும் அழைக்கப்பட்டு, பின்னர் அது மருவி இந்துப்பு என்றானது. தற்போது ‘ராக் சால்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்துப்பில் உள்ள கனிமத்தாதுக்கள்

சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே இந்துப்பிலும் சோடியமும் குளோரைடும் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம்,  மாங்கனீஸ்,  இரும்பு,  துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.

utilize of himalayan salt

இந்துப்பு நன்மைகள்

  • இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக் கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.
  • தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும். செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து இந்த இந்துப்பு.
  • குளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க  உதவுகிறது.
  • குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டும், மலத்தை இளக்கும்.
  • ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவுவதோடு, நிம்மதியான உறக்கத்தைத் தருவதுடன் தைராய்டு பிரச்னைக்கும் தீர்வாக இருக்கிறது.
  • ஆயுர்வேதத்தில் பல மூலிகை மருந்து தயார் செய்வதில் இந்த இந்து உப்பு சேர்க்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த மருந்தின் வீரியம் வேகமாக உடலுக்கு சென்று வேலை செய்ய தொடங்குகிறது என்று கூறபடுகிறது.

இப்படி எல்லா வகையிலும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் இந்த இந்து உப்பானது நம் தினசரி உணவு பயன்பாட்டிற்கு மிகவும் சிறந்தது.

M.Nivetha
nnivi316@gmail.com

English Summary: Do you know, amazing health benefits and nutrition value of Himalayan Salt? Published on: 23 December 2019, 04:45 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.