1. வாழ்வும் நலமும்

கேரளா மக்களின் மனம்கவர்ந்த டீ எது தெரியுமா?

KJ Staff
KJ Staff
Ayurvedic Herbal Waters

'நீரின்றி அமையாது உலகு'  நாமும் தான்.  நம் உடலின் பெரும் பகுதியும் நீரால் ஆனது தான்.  ஜனனம் கூட நீரிலிருந்து தான் தொடங்கியது. உயிர் வாழ மிக இன்றியமையாது நீர் என்றால் நம்ப முடிகிறதா? நாம் உடலில் தோன்றும் பெரும்பாலான நோய்களுக்கு காரணம் தண்ணீர் பற்றாக்குறையே. மருத்துவர்களின் பரிந்துரை படி, உடலுக்கு தேவையான நீரை முறையாக சுத்திகரித்து, முறையாக பருக வேண்டும் என்கிறார்கள்.

தாதுப்புகள் (Minerals)

பொதுவாக இயற்கையான நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரில் மெக்னீசியம், கால்சியம், கார்பனேட், தாமிரம் போன்ற தாது பொருட்கள் இயலப்பாகவே கலந்துள்ளன.  ஆனால் சுத்திகரிக்கப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில்  இந்த தாதுப் பொருட்கள் எல்லாம் சேர்க்கப்படுகிறதா என்பதற்கு நம்மிடம் எவ்வித சான்றும் இல்லை. மேலும், சுத்திகரிப்பு இயந்திரங்களில் தண்ணீரை சுத்திகரிக்க  மூன்று மடங்கு தண்ணீர் வீணாகிறது.

மகத்துவம் நிறைந்த செம்பு (Magnificent copper)

வீட்டில் கிடைக்கும் தண்ணீர் அல்லது குழாய் தண்ணீரை செப்பு பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால் போதும், எவ்வித செலவில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட நீர் தயார். பனி காலங்களில் செம்பு பாத்திரம் மூலமும், கோடை காலங்களில் மண்பானை மூலமும் ஊற்றி வைத்து சுத்திகரிக்கலாம். அதே போன்று வீட்டிலேயே மூலிகை குடிநீரை தயார் செய்து குடும்பத்தினர் அனைவரும் பருகலாம்.

பதிமுகம் குடிநீர் (Drinking water)

கேரளா மக்கள் பெரும்பாலனோர் பதிமுகம் குடிநீரை குடிக்கும் பழக்கமுள்ளவர்கள். அவர்களின் ஆரோக்கியத்திற்கு இதுவும் முக்கிய காரணம் ஆகும். தாகச் சமணி, தாக முக்தி, பதிமுகம் என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மூலிகைகள் அங்கே சாதாரணமாகக் கிடைக்கின்றன.

Pathimugam Water

பதிமுகம் குடிநீரின் மருத்துவப் பயன்கள் (Medicinal uses)

பதிமுகம் இட்டு காய்ச்சிய குடிநீர் வெளிர் ரோஜா நிறத்தில் இருக்கும். பதிமுகம் என்பது ஒருவகையான  சாயமரம். இதன் மர பட்டைகளை நீரில் கொதிக்க வைத்துக் குடிப்பதினால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.  இதில் ‘Jug lone’ எனும் வேதிப்பொருள் கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட பதிமுக நீர் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிக உதிர போக்கைக் கட்டுப்படுத்தி, வெள்ளைப்படுதலையும்  குறைக்கிறது. உடல் சூட்டை தவிர்த்து பசியையும் தூண்டுகிறது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பதிமுகத்தை வாங்கி மழை மற்றும் குளிர் காலங்களில் பயன்படுவதால் பல நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே தவிர்த்து விடலாம். மூலிகை நீரை தொடர்ந்து குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
Anitha Jegadeesan
krishi Jagran 

English Summary: Do you know Kerala famous Pathimugam Water and its medicinal benefits? Published on: 12 November 2019, 04:58 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.