1. வாழ்வும் நலமும்

தூக்கம் பற்றிய கட்டுக்கதைகள் தெரியுமா உங்களுக்கு?

R. Balakrishnan
R. Balakrishnan
Myths about Sleep

இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், தூஙகுவதற்கு எதையெல்லாமோ செய்வார்கள். இதில் பல கட்டுக் கதைகளும் அடங்கும். முக்கியமாக மதுக் குடித்து விட்டுத் தூங்கினால் நல்ல தூக்கம் வரும் என சொல்வதை நாம் கேட்டிருப்போம். தூக்கம் பற்றிய கட்டுக்கதைகள் ஒருவருடைய உடலில், பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கட்டுக்கதை - 1 (Myths - 1)

ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கினால் போதும் என்ற கட்டுக்கதை இன்னமும் உள்ளது. 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கினால், உடலுக்கு மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை நிரூபிப்பதற்கு எங்களிடம் பல்வேறு ஆதாரங்கள் உள்ளது என கூறுகிறார், ரெபெக்கா என்ற ஆராய்ச்சியாளர். தேவைக்கு குறைவான நேரம் தூங்குவதால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் ஆயுட்காலம் குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கட்டுக்கதை - 2 (Myths - 2)

தூங்குவதற்கு முன்பு மதுக்குடித்தால் நன்றாக தூக்கம் வரும் என்பது குடிமகன்கள் பின்பற்றும் கட்டுக்கதையாகும். உடனடியாக தூங்குவதற்கும், ஆழ்ந்த தூக்கத்திற்கும் வேறுபாடு உள்ளது. மது அருந்துவதால் உங்களுக்கு தூக்கம் வரலாம். ஆனால், உண்மையில் மது அருந்துவது ஒருவருடைய சராசரி தூக்க நேரத்தை குறைக்கவே செய்கிறது என்கிறார் ரெபெக்கா.

கட்டுக்கதை - 3 (Myths - 3)

வேலை முடித்து சோர்வாக வீட்டிற்கு வந்தால், தொலைக்காட்சி பார்த்தால், சோர்வு நீங்கி தூக்கம் வரும் என சிலர் நம்புகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறானது. மொபைல், டிவி மற்றும் கணிணி என அதன் திரைகளை பார்க்கும் போது, தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை தடுத்து விடும்.

கட்டுக்கதை - 4 (Myths - 4)

தூக்கம் வரவில்லை என்றால் படுக்கையை விட்டு எழாமல் இருப்பது தவறாகும். பொதுவாக ஒருவர் படுக்கைக்கு சென்றதும், அடுத்த 15 நிமிடங்களில் தூக்கம் வர வேண்டும். அப்படி தூக்கம் வரவில்லை எனில், உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து, வேறுபட்ட சூழலுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என ரெபெக்கா கூறுகிறார்.

கட்டுக்கதை - 5 (Myths - 5)

இரவில் தூங்கும் முன் அலாரம் வைத்து விட்டால், காலையில் அலாரம் அடித்ததும் ஸ்னோஸ் செய்வது தவறான செயலாகும். இந்த செயல், உங்களது தூக்கத்தின் தரத்தை குறைப்பதோடு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டை திணறடிக்க செய்கிறது. நாளை காலை நீங்கள் எழும்போது, மீண்டும் தூக்கம் வந்தால், பிரகாசமான வெளிச்சம் கிடைக்கும் இடத்தை நோக்கி செல்லுங்கள்; தூக்கம் பறந்துவிடும்.

மேலும் படிக்க

தொப்பைக்கு குட்பை சொல்லனுமா? இந்தக் காய்கறியை பச்சையா சாப்பிடுங்கள்!

குடல் ஆரோக்கியம் காக்க நாம் எப்படி உண்ண வேண்டும்?

English Summary: Do you know the myths about sleep? Published on: 21 June 2022, 07:39 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.