Krishi Jagran Tamil
Menu Close Menu

உடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா?

Friday, 04 October 2019 06:33 PM
Lemongrass

லெமன் க்ராஸ்” என்னும் எலும்பிச்சை புல்  இன்று அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இந்த லெமன் க்ராஸ் தமிழில் வாசனைப் புல்” என்றும் அழைக்கப் படுகிறது. இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளன. இந்தியாவை பொறுத்தவரை வெகு சிலருக்கே இது பரிட்சியமான மற்றும் பயன்படுத்தப்பட்டு வரும் அரிய வகை மூலிகை ஆகும்.

தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்ட இந்த லெமன் க்ராஸானது பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேஷியா, இந்தியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. புத்துணர்ச்சியினை கொடுக்க கூடிய இந்த புல் இந்தியாவில்,  கேரளா மாநிலத்தில்  அதிக அளவில் பயிரிடப்படுகின்றன

எல்லா வகையான‌ மண் வகைகளிலும் நன்கு செழித்து வளர கூடியது, மேலும் இதனை வீட்டு  தொட்டிகளிலும் வைத்துக் கூட வளரச் செய்யலாம். இது கொஞ்சம் லெமனின் நறுமணமும், கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருப்பதால் இதனை “எலுமிச்சைப் புல்”, “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.  

Beautiful Lemongrass

இந்த லெமன் க்ராஸ் என்ற புல் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவை 

 • லெமன் க்ராஸ் டீ
 • லெமன் க்ராஸ் பவுடர்
 • லெமன் க்ராஸ் ஆயில்
 • லெமன் க்ராஸ் சோப்பு
 • லெமன் க்ராஸ் ரூம்  பிரெஸ்னர்

என எண்ணற்ற பொருட்கள் தயாரிக்க இது மூலப்பொருளாக பயன் படுகிறது.

லெமன் க்ராஸ் டீ

லெமன் க்ராஸ்  டீயை தயாரிக்க, அதன் இலைகளை சிறிதாக நறுக்கி  நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.  10 நிமிடம் கொதிக்க விட்டால் போதுமானது, இத்துடன் சர்க்கரை எதுவும் சேர்க்காமல் பருகினால் பலன் முழுமையாக கிடைக்கும்.

ஆரோக்கிய பயன்பாடு

தாய்லாந்து மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் லெமன் க்ராஸ் மிக முக்கிய காரணமாகும்.  லெமன் க்ராஸ் டீ உடலில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்று அக உறுப்புகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ளும். இதில் இருக்கும் வேதிப் பொருட்கள் செரிமான பிரச்னையை தீர்த்து உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

லெமன் க்ராஸ் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது அறிந்ததே. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் நம் அருகில் வராது.

Lemongrass Oil

மெலிந்த தேகம் 

இன்று நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனை  உடல் பருமன். விரைவில்  எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்ற மிக குறைந்த கலோரிகளை கொண்ட லெமன் கிராஸ் டீ தொடர்ந்து குடித்து வாருங்கள்.

சர்க்கரை நோயா

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் செய்து இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதுடன் இந்த மாதவிடாய் வலியை குறைகிறது.

மலச்சிக்கல் சிக்கலா

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் சந்திக்கும் பிரச்சனை  இந்த மலச்சிக்கல். இயற்கை அளித்துள்ள வரப்பிரசாமான இந்த லெமன் க்ராஸ் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் உடலில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உயர் ரத்த அழுத்தத்தமா

ரத்தத்தில் உள்ள கெட்ட  கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்க இந்த லெமன் க்ராஸ்  டீ பேருதவியாக இருக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை சீர் செய்து,  இதய நோய்கள் வராமல் தடுத்து விடுகிறது.

முடி உதிர்வா

அட என்ன செய்தாலும் முடி உதிர்வு குறையவில்லையே என்கிறவர்களுக்கு ஒரு எளிய மருந்து லெமன் க்ராஸ் டீ குடித்து வந்தாலே போதும். இதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி உங்களின் முடி உதிர்வுக்கு  முற்றுப்புள்ளி வைக்கும்.

லெமன் க்ராஸ் ஆயில்

இது வெளிப்புற பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தது. சரும பிரச்சனைகளையும், வலிகளையும் நீக்க உதவுகிறது. கிருமி நாசினியாகவும், மணமுட்டியாகவும்  பயன்படுகிறது. தீபங்களில் இந்த ஆயிலை பயன்படுத்தும் போது நறுமணமும், புத்துணர்வும் உண்டாகும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

Lemongrass Nutrition Facts Stomach Disorders Disease Protection Support healthy Lifestyle Reducing bad cholesterol Oil Reduces Aches Lemongrass Health benefits Lemongrass
English Summary: Do You Know the Surprising Health Benefits Of Lemongrass? Here Check out Nutrition Facts also

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. தொழில் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் முத்ரா திட்டம்!
 2. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு!
 3. அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
 4. பயிர் காப்பீடு திட்டம் : கடந்த ஆண்டில் ரூ.68.91 கோடி இழப்பீடு வழங்கி அரசு நடவடிக்கை!
 5. தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட்டது மத்திய அரசு!!
 6. குண்டாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்... இந்த ஆசனங்களை செய்தால் போதும்!
 7. சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிசயம் நிகழ்த்தும் பப்பாளி
 8. ஆண்டு முழுவதும் வருமானம் அளிக்கும் செடி முருங்கை சாகுபடி!
 9. சிக்கன் பிரியர்களா நீங்கள்..? உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்!
 10. நோய் நொடி தீர்க்கும் அற்புத மூலிகைச் செடிகளும், மருத்துவ குணங்களும்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.