கொரோனா நோய் தொற்று பரவிலன் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காகதது மற்றும் போதுமான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காததே இதற்கு காரணம். இந்த புதிய கொரோனா வைரஸின் தாக்கத்தால் நோய் தாக்குதல்கள் சிறிது மாறுபட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிட்19 நோய் அறிகுறிகள்
கொரோனா நோய் தொற்று தாக்குதல் அறிகுறிகளின் புதிய பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். COVID-19 இன் பொதுவான அறிகுறிகளான காய்ச்சல், உடல் வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, குளிர், மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும். பல ஆய்வுகள் இளஞ்சிவப்பு கண்கள், காஸ்ட்ரோனமிகல் நிலைமைகள் மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுகின்றன.
கண்கள் சிவப்பாக மாறுதல்
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது அல்லது வெண்படல அழற்சி (conjunctivitis) தோன்றுவது COVID-19 நோய்த்தொற்றின் அறிகுறியாகும். கண்கள் சிவப்பது, கண்ணில் வீக்கம் மற்றும் கண்களில் நீர் வருவது ஆகியவையும் அடங்கும். கொரோனா வைரஸின் புதிய திரிபால் பாதிக்கப்பட்ட 12 பேரிடம் செய்த ஆய்வில் இந்த அறிகுறிகள் தெரிந்தன.
காது தொடர்பான பிரச்சினைகள்
அண்மையில் கேட்கும் திறனில் ஏதாவது வித்தியாசமோ அல்லது ஒலியை கேட்கும் போது அது மிகவும் குறைந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தாலோ, அது COVID-19 இன் அடையாளமாக இருக்கலாம். COVID-19 நோய்த்தொற்று செவிப்புலன் பிரச்சனைகளை கொடுப்பதாக சர்வதேச ஆடியோலஜி சஞ்சிகையில் (International Journal of Audiology) வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. COVID-19 செவிப்புலன் மற்றும் வெஸ்டிபுலர் (vestibular) சிக்கல்களுக்கு இடையிலான தொடர்பை 56 ஆய்வுகள் அடையாளம் காட்டியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோவிட் இரண்டாம் அலை தாக்குதலில் செவிப்புலன் இழப்பு 7.6 சதவிகிதம் என்று 24 ஆய்வுகளில் தெரிவிக்கின்றன.
சுவாச பிரச்சினைகள்
இரைப்பை குடல் அறிகுறிகள் (Gastrointestinal Symptoms): கோவிட் இரண்டாம் அலையினால் இரைப்பை குடல் பாதிப்பு தொட்ர்பான புகார்களும் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோவிட் -19 தொற்று, சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. இருப்பினும், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, குமட்டல் மற்றும் வலி ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. எனவே செரிமானத்தில் ஏதேனும் அசெளகரியம் ஏற்பட்டால் அது கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கமாகவும் இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்
மக்கள் எப்பொழுதும் முககவசத்தை அணிய வேண்டும் என்றும், பொது இடங்கள் மற்றும் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அவசியம் ஏற்பட்டால் கூட்டமான இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், வீட்டிற்கு திரும்பிய உடன் கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Share your comments