1. வாழ்வும் நலமும்

மனிதர்களை அச்சுறுத்தும் குலெக்ஸ் (CULEX) கொசு!

Sarita Shekar
Sarita Shekar
CULEX MOSQUITOES

மீண்டும் அதிகரித்து வரும் குலெக்ஸ் (CULEX MOSQUITOES) அல்லது பொதுவான வீட்டு கொசுக்கள் , பொதுமக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பொதுமக்களின் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ள குலெக்ஸ் கொசுக்கள் என்றால் என்ன? அவை எவ்வளவு தீங்கு விளைவிக்கும்? என்பதை குறித்து அந்த கட்டுரையில் காண்போம்.

குலெக்ஸ் (CULEX) கொசுக்களின் உற்பத்திக்கு வெப்பநிலை முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பருவ நிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வு ஆகியவற்றால், குலெக்ஸ் அல்லது பொதுவான வீட்டு கொசுக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் குலெக்ஸ் (CULEX) கொசு காரணமாக பல குடியுரிமை நலச் சங்கங்கள், நகராட்சி நிறுவனங்கள் உயர்மட்டக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்து அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் உந்துதலை தீவிரப்படுத்தியுள்ளன.

குலெக்ஸ் கொசுக்கள் என்றால் என்ன, கவலைப்பட வேண்டிய அவசியம் ஏன்?

இந்த கொசுக்களின் உற்பத்திக்கு முக்கிய காரணம் வெப்பநிலை. வெள்ளப்பெருக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவற்றின் இருப்பு குறிப்பாக உணரப்படுகிறது, ஏனெனில் இங்கு இக்கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கான சிறந்த நிலை நிலவுவதாக கருதப்படுகிறது. சுமார் 1-1.5 கி.மீ தூரம் வரை பறக்கும் வல்லமை படைத்த குலெக்ஸ் (CULEX) கொசுக்களால் பல கொடிய நோய் பரவும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை எவ்வாறு தீங்கு விளைவிக்கின்றன?

குலெக்ஸ் கொசுக்கள் ஜப்பானிய என்செபாலிடிஸின்( Japanese encephalitis)  அறியப்பட்ட கேரியர்கள், இது உயிருக்கு ஆபத்தானது ஆனால் அரிதான வைரஸ் நோயாகும். இது மூளையின் “கடுமையான அழற்சியை”( “acute inflammation” ) ஏற்படுத்துகிறது.

குலெக்ஸ் கொசுக்களின் அதிகரிப்புக்கு வானிலை எவ்வாறு பங்களிக்கிறது?

கோடைகாலத்தில் நீர் தேக்கங்கள் குறைந்து வருவதால், வெள்ள சமவெளிகளில் மந்தநிலைகள் நிலவுகின்றன, நீர் அட்டவணை அதிகமாக இருப்பதால் வெப்பமான காலநிலையில் கூட நீர் இன்னும் உள்ளது அதனால் இத்தகைய பகுதிகளில் குலெக்ஸ் கொசுகளுக்கு இணப்பெருக்கம் செய்வதற்கான சிறந்த இடமாக இருக்கிறது என்று கிழக்கு (MCD மருத்துவ சுகாதார அதிகாரி,  டாக்டர் சோம் சேகர்(Dr Som Shekhar ) குறிப்பிடுகின்றார்.

இந்து ராவ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் அருண் யாதவ் கூறுகையில், தற்போதைய வெப்பநிலை கொசு இனப்பெருக்கம் செய்வதற்கான சிறந்த வெப்பநிலை: “கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற நிலை 10 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த நெரம் கொசு எதிர்ப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

குடிமை அமைப்புகள் என்ன செய்கின்றன?

EDMC இன் பொது சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், “நாங்கள் முக்கிய வடிகால்களில் , கொசு லார்விசிடல் எண்ணெய்யை தூவியுள்ளோம். அவை மேற்பரப்பில் ஒரு அடுக்கை உருவாக்குகி கொசு உற்பத்தியினை தடுக்கிறது. மேலும், நீண்ட காலத்திற்கு செயல்படும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுகிறது. இது கொசுக்களை முடக்குகிறது. தெற்கு மற்றும் வடக்கு நிறுவனங்களும் இதே போன்ற பயிற்சிகளைத் திட்டமிட்டுள்ளன.

“குலெக்ஸ் கொசுக்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கழிவு நீரில் உருவாகிகிறது, குறிப்பாக புயல் நீர் மற்றும் பிற வடிகால்களில் இனப்பெருக்கம் செய்கின்றது.  இதை எதிர்த்து, இந்த ஆண்டு, நாங்கள் ஒரு புதிய முறையைக் கொண்டு வந்துள்ளோம் - லார்வா எதிர்ப்பு மருந்துகளைக் கொண்ட பீப்பாய்களை வடிகால்களுக்குள் வைத்து நிலத்தடியில் புதைத்தோம். மேலும், தடுப்பு நடவடிக்கையாக கடந்த மூன்று நாட்களாக ஸ்ப்ரேக்கள் மற்றும் மருந்துகள் வடிகால்களுக்குள் வைக்கப்படுகின்றன,” என்றும் என்.டி.எம்.சியின் மூத்த தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார்.

எனவே இத்தகைய சூழ்நிலையில், உங்களை சுற்றியுள்ள இடத்தை சுத்தமாகவும் , தண்ணீர் தேங்காமல் கவனித்து கொள்ளுங்கள் .

English Summary: CULEX mosquito threatening humans! Published on: 08 April 2021, 03:49 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.