குறைவான உடல் உழைப்பைச் செய்பவர்கள், அதிகளவிலான சர்க்கரையை உண்பதால் உடல் பருமன் ஏற்படுவதோடு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. ஏன், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைய சர்க்கரை க்ளுகோஸ் தேவைப்படுகிறது. இனிப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு உட்பட 6 சுவைகள் தான் நம் நாக்கைக் கட்டிக் காப்பவை. இதில் எது அதிகரித்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடுதான்.
அதேபோல், அதிகளவில் உண்ணும் பொருட்கள் அனைத்துமே, நம் உடலுக்கு நல்லதை செய்யாது, அதேபோல தான் சர்க்கரையும், அதிகப்படியான சர்க்கரை உண்பதால் நீரிழிவு நோய் ஏற்படுவதோடு எலும்புகளுக்கும் கேடு உண்டாகும். ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறை இயக்குநர் டாக்டர் வேதாந்த் கப்ராவின் கூறுகையில், அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி மற்றும் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள், சர்க்கரை புற்றுநோயை உருவாக்கும் என்று கூறவில்லை, ஆனால் அவை உடல் பருமனை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
இருப்பினும் சில புற்றுநோய் நிபுணர்கள் சர்க்கரை புற்றுநோயை உருவாக்கும் என்று நம்புகிறார்கள். அதிகப்படியான சர்க்கரை உடல் பருமனை ஏற்படுத்துகிறது, இதன் விளைவால் உடலில் புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறுகின்றனர்.
கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய இயற்கையான உணவைப் பொறுத்து சர்க்கரையின் அவசியம் உள்ளது என போர்டிஸ் மருத்துவமனை ஷாலிமார் பேக், மெடிக்கல் ஆன்காலஜியின் இயக்குநர் டாக்டர் மோஹித் அகர்வால் கூறியுள்ளார்.
மேலும் ஒருவர் எவ்வளவு சர்க்கரை சாப்பிடலாம் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரின் உடல் எடை மற்றும் உயரம் இவற்றை கணக்கில் கொண்டுதான் ஒருவரது உடலுக்கு தேவைப்படக்கூடிய சர்க்கரையின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
சர்க்கரையை அதிகப்படியாக சேர்த்தல் எவ்வாறு புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதை பற்றி டாக்டர் அகர்வால் விளக்குகிறார், புற்றுநோய் செல்கள் மிக வேகமாக வளர்ச்சியடைய அதற்கு நிறைய சர்க்கரை க்ளுகோஸ் தேவைப்படுகிறது. அதனால் அதிகப்படியான சர்க்கரை செல்களின் வளர்ச்சியைத் தூண்டுவதால் இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இருப்பினும் சர்க்கரை உண்பதால் புற்றுநோய் ஏற்படும் என்று தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை, ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கூட, அவர்கள் சர்க்கரையை உண்ணலாம் அதனால் பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
எப்படியிருந்தாலும் அதிகப்படியான சர்க்கரையைச் சாப்பிட்டால் நிச்சயம் இந்த இரண்டு உடல் உபாதைகள் ஏற்படும். ஒன்று நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு, உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது.
மற்றொன்று அதிகப்படியான சர்க்கரை மற்றும் குறைவான உடல் உழைப்பில் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டு அதன் மூலம் பல்வேறு தீங்குகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உருவாகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
மஹாசிவராத்திரி விழா - ஈஷாவில் கோலாகலக் கொண்டாட்டம்!
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - ஒரு பார்வை!
Share your comments