Mouth Ulcers:
வாய் புண்கள் என்பது ஒரு பொதுவான பிரச்சினை. பெரும்பாலும் மக்கள் இந்த பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும். வயிற்றில் ஏற்படும் வெப்பம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சில நேரங்களில் வாயில் புண் ஏற்படுகின்றது . வாயில் கொப்புளங்கள் உருவாகுவதால் நிறைய சிரமங்கள் ஏற்படும், உணவை விழுங்குவதிலும் நிறைய சிரமங்கள் இருக்கும். அதே நேரத்தில், அதிக காரமான(Spicy Food), எண்ணையில் வறுத்த உணவை சாப்பிடுவதும், சூடான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த சிக்கலை ஏற்படுத்துகிறது. இருப்பினும், சில எளிதான வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் இந்த பிரச்சனைகளை நீங்கள் சமாளிக்க முடியும்.
பேக்கிங் சோடா
வாயில் ஒரு புண் இருந்தால், ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை மிதமான தண்ணீரில் கலந்து, பின்னர் ஒரு நாளைக்கு பல முறை அதனை கொண்டு வாய் கொப்பளிக்கவும். இவ்வாறு செய்வதனால் வாய்க்கு நிவாரணம் அளிக்கும், மேலும் புண்களில் ஏற்படும் வலியும் குறையும்.
அயிஸ்
வாய் புண்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் இது வயிற்றின் வெப்பத்தால் கூட ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், அயிஸ்சின் குளிர்ச்சி நன்மை பயக்கும். இதற்காக, கையால் உங்கள் நாக்கில் ஒரு அயிஸ் துண்டை வைக்கவும்,அவ்வாறு செய்யும் பொழுது நமது உமிழ்நீரும் கலந்து விடும். இது வலியைக் குறைத்து நிவாரணம் அளிக்கும்.
படிகார கல் (Alum)
படிகார கல், வாய் புண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதற்காக, கொப்பளங்கள் உருவானப் பகுதியில் படிகார கல் தடவவும். இருப்பினும், சில நேரங்களில் படிகார கல் பயன்படுத்தும் போது புண்களில் எரியும் உணர்வு ஏற்படும். ஆனால் நிவாரணம் கிடைக்கும்.
மிதமான சுடு நீர்
இந்த எளிய தீர்வு உங்களுக்கு நிம்மதியை தரும். இதற்காக, ஒரு டீஸ்பூன் உப்பை மிதமான தண்ணீரில் கலந்து இந்த தண்ணீரில் ஒரு நாளைக்கு பல முறை கொப்பளிக்க வேண்டும். உங்கள் கொப்பளங்கள் வற்றி பழைய நிலைக்கு வாய் திரும்பும்.
ஏலக்காய்
வாய் புண்களை அகற்றுவதில் பச்சை நிற ஏலக்காய் நன்மை பயக்கும். இதற்காக, ஏலக்காயை நன்றாக அரைத்து, அதில் ஒரு சொட்டு தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் வாய் புண்களில் தடவவும். இது வயிறு மற்றும் வாயின் வெப்பத்தை நீக்கி, உங்கள் புண்ணை குணமடையத் தொடங்கும்.
மஞ்சள்
வாய் புண்களின் நிவாரணத்திற்கும் மஞ்சள் நன்மை பயக்கும். இதற்காக, சிறிது மஞ்சள் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த தண்ணீரில் கரைக்கவும். இதுவும் நிவாரணம் தரும்
மேலும் படிக்க
பல நோய்களுக்கு சிறந்த மருந்து கம்பு! இதை புறக்கணித்தால் வரும் வம்பு !!
ராகியில் இருக்கும் சிறப்பு நன்மைகள்: இனி ராகியை தவிர்க்கவேண்டாம்!!
Share your comments