பார்வைக்குறைபாட்டுக்கு காரணங்கள் பலவும் உண்டு. உடலில் மிக முக்கியமான உறுப்பான கண்களின் பார்வைத்திறன் சீராக வைத்திருக்க விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் G.K.தாராஜெயஸ்ரீ BAMS.
தூங்கி எழுந்ததும் கண்களை குளிர்ந்த நீரால் கழுவி எடுக்கவும். வாயில் தண்ணீரை முழுவதும் நிரப்பி குளிர்ந்த நீரை கண்களில் படும்படி சுத்தம் செய்யுங்கள். இது வாயில் நீர் செலுத்தும் அழுத்தத்தின் காரணமாக கண்களின் தசைகளை தூண்டும்.
கண்களுக்கு மசாஜ் (Massage for Eyes)
உங்கள் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் உங்கள் புருவங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கட்டைவிரல் புருவங்களுக்கு மேல் இருக்கும் ஆள்காட்டி விரல் புருவங்களுக்கு கீழ் இருக்கும்.
புருவங்களை இலேசாக அழுத்தி நேராக்கவும். அனைத்து புள்ளிகளிலும் இலேசான அழுத்தத்தை காட்டவும். கட்டை விரலால் கண் இமையை சுற்றி கண்களோடு சேர்த்து மென்மையாக மசாஜ் செய்யவும்.
கண்களை சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்த ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு இந்த பயிற்சி செய்யுங்கள். இது கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் பார்வையை பதித்திருப்பவர்களுக்கு சோர்வில் இருந்து மீட்டெடுக்கும்.
பார்வையை மேம்படுத்த பயிற்சி (Training to improve vision)
கண் இமையை சுற்றியுள்ள தசைகளை துண்டுவதற்காக இந்த பயிற்சி செய்யப்படுகிறது. கண்கள் முதலில் வலதுபுறமாகவும் , பிறகு இடதுபுறமாகவும் பிறகு மேலும் கீழும் சுழற்ற வேண்டும். இந்த எதிர் கடிகார திசையில் மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.
கண்கள் ஓய்வெடுக்க உதவ, ஒவ்வொரு ஐந்து முதல் ஆறு விநாடிகளுக்கு ஒருமுறை கண்களை சிமிட்டுங்கள். இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள் கண் சிமிட்டுவதால் கண்களுக்குள் ஈரப்பதம் கிடைக்கும்.
உலர்ந்த பழங்கள் (ம) கொட்டைகள் (Dried fruits and nuts)
பாதாம், திராட்சை மற்றும் அத்திப்பழங்கள் கண்களுக்கு அமுதமானது. கண் பார்வையை மேம்படுத்த எப்படி எடுக்கலாம். ஆறு முதல் பத்து பாதாம், பதினைந்து திராட்சை இரண்டு அத்திப்பழங்களை சிறிது தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊறவிடவும்.
காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடவும். இந்த பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் செரிமான செயல்முறை சீராக்கி உடல் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இதனால் கண் பிரச்சனைகள் தீர்கிறது.
மேலும் படிக்க
உயிர்ப் பறிக்கும் சயனைடு தான், உயிர்கள் உருவாக காரணம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
Share your comments