குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும் தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பது தான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர்.
சளி, காய்ச்சலா, ஒரு சில சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய்யை சுடுநீரில் விட்டுக் குளித்தால், சளி பறந்து போகும் என்று சிகிச்சைகள் கூட சொல்வார்கள். ஆனால் நல்ல சூடான தண்ணீரில் குளிப்பது, உடலுக்குக் கெடு பயனையே விளைவிக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
1. குழந்தைப் பேறு (Childbirth)
சுமார் 30 நிமிடங்கள், தொடர்ந்து மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களுக்கு குழந்தைப் பேறு தொடர்பான பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மருத்துவ இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.
எனவே, குழந்தைப் பேறு பிரச்னையை எதிர்கொண்டிருப்பவர்கள், மிகச் சூடான தண்ணீரில் குளித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக்கியிருந்தால், அதனை கைவிட்டு, குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
2. தோல் வறட்சி (Dry Skin)
பொதுவாக, குளிர்காலத்தில் நம்மை புத்துணர்ச்சிக்கு உள்ளாக்கும் என்று மிகவும் நம்பும் சூடான குளியல் தான், ஏற்கனவே பனியால் வறண்டு போன நமது தோலை மேலும் வறட்சிக்குள்ளாக்குகிறது.
சூடான தண்ணீரை தோலின் மீது ஊற்றும்போது, அதிலிருக்கும் ஈரப்பதத்தையும் தண்ணீர் எடுத்துவிடுகிறது. ஒரு வேளை உங்கள் தோல், மிருதவானதாக இருந்தால், நிச்சயம் சுடுதண்ணீரில் குளிப்பதைத் தவிர்த்து விடலாம். இதனால் சில தோல் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
3. முடி கொட்டும் (Hair fall)
மிகச் சூடான தண்ணீரை தலையில் ஊற்றி குளிக்கும்போது, அதனால் தோல் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு முடி உதிரும் பிரச்னை ஏற்படும். சிலருக்கு ஏற்கனவே அதிகமாக முடிகொட்டும் பிரச்னை இருக்கும். அதற்காக சில சிகிச்சைகளையும் செய்வார்கள். ஆனால், அப்போது தொடர்ந்து சுடு தண்ணீரில் குளித்துக் கொண்டே இருந்தால் முடி கொட்டும் பிரச்னை குறையாது.
4. பழக்கமாகிவிடலாம் (Regular habit)
தொடர்ந்து சுடு தண்ணீரில் குளிப்பதை ஒருவர் செய்து வரும்போது, அது அவர்களுக்கு பழக்கமாகி, விட்டால், எப்போதுமே சுடுநீரில் தான் குளிக்க விரும்புவார்கள். வேறு வழியில்லாத நிலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும் நிலை ஏற்பட்டால், அது ஒரு சங்கடத்தை அளிக்கலாம். எனவே, சுடு நீரில் குளிக்கும் பழக்கத்துக்கு சிலர் அடிமையாகி விடக் கூடும்.
5. வயதான தோற்றம் (Old age look)
குளிர்ந்த நீரில் குளிப்பவர்களை விடவும், சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல் மிக விரைவாகவே தளர்வடைந்து விடும்.
பொதுவாக எல்லோருக்குமே நாம் மிக அழகாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், தொடர்ந்து அதுவும் மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல்வி மிக விரைவாக தளர்ந்து வயதான தோற்றத்தைக் கொடுக்கும் அபாயம் உள்ளது.
மேலும் படிக்க
சர்க்கரை வியாதி வராமல் தடுக்க எளிய வழி எது?
Be Alert: இந்த ஆரோக்கிய உணவுகளும் ஆபத்தாய் முடிய வாய்ப்பிருக்கு!
Share your comments