1. வாழ்வும் நலமும்

காலையில் ஓமம் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

R. Balakrishnan
R. Balakrishnan
Omam water

தற்போதைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மக்களிடையே பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளன. பெரும்பாலான மக்கள், அதிக எடை பிரச்னையால் சிரமப்படுகின்றனர். உடல் பருமனாக இருப்பதால் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன.

தொப்பையை குறைக்க

ஓமம் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். இதனால், கொழுப்பு குறைந்து தொப்பையை குறைக்க உதவுகிறது. மேலும், ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன.

இது தவிர, மலச்சிக்கல் நீங்கும். வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் பலர் சிரமப்படுகின்றனர். எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும். அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாள்களில் நல்ல பலன் தெரியும். ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.

கிராமப்புறங்களில் ஓமம் வாட்டர் பாட்டில்களில் கூட விற்கப்படுகின்றன. எனினும் தரமான ஓமம் வாட்டரை பயன்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க

இரவில் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

English Summary: Does drinking Omam water in the morning have so many benefits? Published on: 13 September 2022, 02:49 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.