Eat more of these foods to protect the liver!
மனித உடலில் பல உறுப்புக்கள் உடலின் முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அவற்றில் ஒன்று தான் கல்லீரல். இத்தகைய கல்லீரல் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுதல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிப்பது போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த கல்லீரல் மனித உடலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு பொறுப்பு என்பது தெரியுமா? ஆம். ஆகவே நமது உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென்று நினைத்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பச்சை இலைக் காய்கறிகள்
பசலைக்கீரை, வெந்தயக்கீரை, கடுகு கீரை. கோதுமைப்புல், பீட்ரூட் இலைகள் போன்ற கீரைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, நைட்ரேட், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. இவை அனைத்துமே கல்லீரலை ஆதரிக்கவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
கிரேப் ஃபுரூட் (Grape Fruits)
கிரேப் ஃபுரூட் நாள்பட்ட அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. ஆய்வின் படி, கிரேப் ஃபுரூட்டில் கல்லீரல் இழைநார் வளர்ச்சியைக் குறைக்க உதவும் நரிங்கெனின் மற்றும் நரிங்கின் ஆகிய 2 முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகின்றன.
காபி (Coffee)
ஆய்வுகளின் படி, காபி கல்லீரலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, ப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது மற்றும் கல்லீரல் அழற்சியின் வளர்ச்சிக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கக்கூடியது.
முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர்
இவை குளுக்கோசினோலேட்டுகளைக் கொண்டிருக்கின்றன. இது இரத்தத்தில் இருந்து கன உலோகங்களை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது.
பீட்ரூட் (Beetroot)
பீட்ரூட் பித்த நீரின் ஓட்டத்தைத் தூண்டி, உடலில் இருந்து வேகமாக வெளியேற்றும் அளவில் கழிவுகளை உடைத்தெறிகிறது.
நட்ஸ்
நட்ஸ்களில் வால்நட்ஸில் அர்ஜினைன் உள்ளது. இது உடலில் இருந்து அம்மோனியாவை அகற்ற உதவுகிறது.
மஞ்சள் (Turmeric)
மஞ்சள் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகிறது. ஆகவே கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உங்களின் அன்றாட சமையலில் தவறாமல் மஞ்சளை சேர்த்து வாருங்கள்.
தண்ணீர் (Water)
தண்ணீர், உடலில் இருந்து நச்சுக்களை எளிதில் வெளியேற்றி, கல்லீரலின் பணியை எளிதாக்கும். இதன் மூலம் கல்லீரலில் நச்சுக்கள் தேங்குவதைத் தடுக்கலாம்.
பூண்டு (Garlic)
பூண்டில் உள்ள செலினியம் கல்லீரலைத் தூண்டி நச்சுக்களை வெளியேற்றும். ஆகவே அன்றாட சமையலில் பூண்டு சேர்க்க மறக்காதீர்கள்.
மேலும் படிக்க
Share your comments