மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 65 - 72 ஆண்டுகள் என்று இருக்கும் நிலையில், இன்னும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஏராளம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நிலவும் பல காரணிகள் மனிதர்களின் வாழ்நாளை குறைக்க கூடியதாகவே இருக்கின்றன. எனினும் நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியத்தில் முக்கிய இடம் பெற்றிருப்பது உணவுப் பழக்கவழக்கங்கள்.
சுத்தமான தேன்: சுத்தமான மற்றும் இயற்கையான தேன் (அதாவது பாட்டிலில் அடைக்கப்படுவதற்கு முன் மட்டுமே வடிகட்டப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த தேன்) இதய நோய்கள் மற்றும் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை.
கோட் மில்க் கெஃபிர் (Goat Milk Kefir): கோட் மில்க் கெஃபிர் என்பது ஒரு பண்பட்ட ப்ரோபயாடிக் பானமாகும், இது குடிக்க கூடிய தயிர் போன்ற சுவை மற்றும் அமைப்பில் உள்ளது. சான்றளிக்கப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகளின் கிரேடு A பாலை கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. இதில் காணப்படும் ப்ரோபயாடிக்ஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது.
மாதுளை: வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற பல வைட்டமின்கள் மாதுளையில் அடங்கி இருக்கிறது. மேலும் மாதுளையில் காணப்படும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ உதவுகிறது. மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிரீன் டீயை விட பல மடங்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன. செரிமானத்தை சீராக்கி, சருமத்தை பளபளப்பாக்கி நீட நாள் வாழ உதவி புரிகிறது மாதுளம் பழம்.
புளித்த உணவுகள்: இவற்றின் மூலம் வயிறு உணவை ஜீரணிக்கும் முறையை ஆரோக்கியமாக மாற்றுகிறது. இவ்வகை உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுடன் ப்ரோபயாடிக்குகளும் இருக்கின்றன. இது ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் தொடர்புடைய உடல் செயல்களை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது
பச்சை வாழை: பச்சை வாழைப்பழம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை 50% வரை குறைக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க
விபத்தின் போது இறப்பைத் தவிர்க்கும் பொன்னான 60 நிமிடங்கள்!
மழைக்கால நோய்கள்: குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
Share your comments