1. வாழ்வும் நலமும்

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இதை சாப்பிடுங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Live a long & Healthy Life

ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நீண்ட ஆயுள் ஒன்றும் கிடைக்காத வரம் அல்ல. இதை நிரூபிக்கிறது நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்று.

ஒருவரை வாழ்த்தும்போது நீண்ட ஆயுளுடன் வாழ்க என்றும், வாழ்க வளமுடன் என்றும் வாழ்த்துவது நமது தொன்மையான மரபு. ஆனால் வாழ்த்துவதும், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விருப்பத்தை நமது உடல் தான் தீர்மானிக்கிறது. வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அக்ரூட் பருப்புகளை சாப்பிடுபவர்களுக்கு இறப்பு அபாயம் குறைவதாகவும், ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் அக்ரூட் எனப்படும் வாதுமைக் கொட்டை முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

வாதுமையை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில் அதை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் ஆயுட்காலம் அதிகமாக உள்ளது. வாரத்திற்கு ஒரு சில அக்ரூட் பருப்புகள் கூட ஆயுளை அதிகரிக்கிறது. குறிப்பாக தரமான உணவு உண்ணாதவர்களுக்கும் இது பொருந்துகிறது என்று ஆய்வு கூறுகிறது.

வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அக்ரூட் கொட்டையை சாப்பிடுபவர்களுக்கு பொதுவாக மரண அபாயம் 14 சதவிகிதம் குறைகிறது, அதேபோல் இருதய நோய்களால் (cardiovascular diseases) இறக்கும் அபாயம் 25 சதவிகிதம் குறைகிறது என்று கூறும் இந்த ஆராய்ச்சி, மேலும் சுமார் ஆயுட்காலத்தை 1.3 வருடங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கிறது.

ஆய்வு

இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் 67,014 செவிலியர்களின் உடல்நலனை கண்காணித்தார்கள். இந்த ஆய்வு சுமார் 20 ஆண்டுகள் (1998-2018) கண்காணிப்பில் நடைபெற்றுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உணவு உட்கொள்ளல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்கள் ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளல் குறித்து தகவல்களை தொடர்ந்து கொடுத்து வந்தனர். இதில், வாதம் கொட்டை, பிற கொட்டை வகைகள் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை உட்கொண்டனர், அத்துடன் உடற்பயிற்சி (Excercise) மற்றும் புகைபிடிக்கும் நிலை போன்ற வாழ்க்கை முறை காரணிகளும் தரவுகளில் சேர்க்கப்பட்டன.

இந்தத் தரவுகளின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நிலைகளில் வால்நட் நுகர்வு மற்றும் நீண்ட ஆயுள் தொடர்பான பல்வேறு சுகாதார குறிகாட்டிகளுக்கு இடையேயான தொடர்புகளை அடையாளம் கண்டறிந்தனர்.

Health Tips: ஆண்களின் கனிவான கவனத்திற்கு!

வாதுமைக் கொட்டை

அக்ரூட் என்னும் வாதுமையில் கீழ்கண்ட சத்துக்கள் உள்ளன:

  • 4% நீர்
  • 15% புரதம்
  • 65% கொழுப்பு
  • 14% கார்போவைதரேட்டு
  • 7% நார்சத்து

100 கிராம் வாதுமைப் பருப்பில் 2740 கிலோயூல்களையும் மாங்கனீசு உட்பர பல உயிர்ச் சத்துக்கள் நிறைந்துள்ளது. வாதுமையில் மோனோ, பால்அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் உயர்ந்த உள்ளடக்கம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு முக்கியமான ஊட்டசத்தாகும். வாதுமையில் உள்ள டிஎச்ஏ எனும் ஒமேகா 3-வகை அமிலமானது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதிலுள்ள நார்சத்து, செலினியம் , வைட்டமின் பி7 ஆகிய சத்துகள் முடி உதிர்வை குறைக்கின்றன.

வாதுமையில் வைட்டமின், தாது சத்துகள் அதிக அளவில் உள்ளன. வாதுமையில் உள்ள நல்ல கொழுப்புகள் கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.

மேலும் படிக்க

கதிர்வீச்சுகளிடமிருந்து கண்களைப் பாதுகாப்போம்!

புத்துணர்ச்சி ஊட்டும் செர்ரி பழத்தின் நன்மைகள்!

English Summary: Eat this to live a long and healthy life! Published on: 22 August 2021, 07:34 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.