கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு (Curfew extension)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து தமிழகத்தில், பல விதமான தளர்வுகளுடன் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
600 நாட்களுக்குப் பிறகு (After 600 days)
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் நேரடி வகுப்புகளை தொடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
திரையரங்குகள் (Theaters)
மேலும், பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் இரவு 11.00 மணிவரை இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, மதுபிரியர்களுக்கு ஓர் நற்செய்தியாக நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் ‘குடி’ மகன்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines)
-
டாஸ்மாக் பார்கள் இயங்க தமிழக அரசு அனுமதிக் கிடைத்திருப்பதால், மதுப் பிரியர்கள், கொரோனாப் பரவலைக் கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றி, அமர்ந்து மது அருந்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
பார்களின் நுழைவாயிலில் சானிடசைர்கள் வைக்கப்படவேண்டும்
பாருக்கு மது அருந்த வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்து கொள்ள வேண்டும்
-
மாஸ்க் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது.
-
மேலேக் கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரஜினியிடம் நேரில் உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் பாதிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை
Share your comments