1. வாழ்வும் நலமும்

Empty stomach: உடற்பயிற்சி செய்ய முடியலையா..? இனிமேல் இதை பாலோ பண்ணுங்க..

Deiva Bindhiya
Deiva Bindhiya

Empty stomach: Can't exercise..? Follow this from now on..

Empty stomach exercise: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என பலர் சொல்லும் கூற்றுக்கு நம் காதுகள் அடிமையாகியுள்ளது. அதுவே, செய்ய முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும். என்பதை இப் பதிவில் பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பை உடல் பயன்படுத்திக் கொள்கிறது, எனவே இவ்வாறு செய்தல் நல்ல பலனை தருகிறது. இதனால் கொழுப்பு கரைதலின் அளவு அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டுமா? வேண்டாமா?

ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னதாகவோ, அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னரோ ஏதாவது சாப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும் .

உங்கள் உடலுக்கு போதுமான எரிபொருளைப் பெற உணவு உதவுகிறது, ஜிம்மிற்குச் செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் போது தசைகள் உடனடியாக வேலை செய்யத் தொடங்குகிறது. எனவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக உணவு உண்பது அவசியமாகிறது.

என்ன சாப்பிட வேண்டும்?

உடற்பயிற்சி செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன், வாழைப்பழம் சில துண்டு ஆப்பிள், ஒரு ஸ்பூன் வெண்ணெய், அல்லது பாதியாக வேக வைத்த முட்டைபோன்றவை சாப்பிட்டால் நன்மை பயக்கும்.

அதேபோன்று, உடற்பயிற்சிக்குப் பின்னர், கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் கழித்து உணவை எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் உடலை சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள உபயோகப்படுத்துவதாகும்.

பயன்கள்:

இதன் மூலம் உங்கள் பசி, எண்ணம் குறைவதுடன், உடற்பயிற்சிக்கு தேவையான ஊக்கத்தை, இவை கொடுக்கிறது. உடற்பயிற்சியின் போது கலோரி எரிவதற்கு, இது உதவுகிறது.

வொர்க்அவுட்டின் போது ஏற்படும் காயங்களைத் தடுக்கவும், இந்த பழக்கம் பேரிதும் உதவுகிறது. உடற்பயிற்சியை செய்ய திட்டமிடும்போதும், செய்யத் தொடங்கும் போதும், அதன் ​​அதிகபட்ச முடிவுகளைப் பெற விரும்புகிறோம் அல்லவா, அதற்கு இது மிக முக்கியமாகும்.

அதை சரியான முறையில் பெற வேண்டுமானால், உடலில் சக்தி அவசியமாகும். தசையை இழுப்பதன் மூலமோ அல்லது உடல் உறுப்பைக் கஷ்டப்படுத்துவதன் மூலமோ அல்லது சோர்வடைவதன் மூலமோ அடிக்கடி நம்மை நாமே காயப்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.

உடலுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இருந்தால், காயங்களைத் தவிர்க்கலாம் மற்றும் உங்கள் வொர்க்அவுட் உண்மையான பலனைத் தரும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

இருப்பினும், உடற்பயிற்சிக்கு முன் பால் பொருட்கள், சிட்ரஸ் பழங்கள், எண்ணெய் உணவுகள், அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க:

சின்ன வெங்காயம் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

சின்ன வெங்கயாயமும் தேனும்:கிடைக்கும் நன்மைகள்!

English Summary: Empty stomach: Can't exercise..? Follow this from now on..

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.