1. வாழ்வும் நலமும்

முருங்கையின் பல்வேறு மகத்தான பயன்கள்

KJ Staff
KJ Staff

பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது

முருங்கையில் அதிகளவு விட்டமின்கள், மினரல் மற்றும் அமீனோ ஆசிட்கள் உள்ளன. இதில் போதுமான அளவு விட்டமின் ஏ, சி, மற்றும் இ உள்ளது. மேலும், இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் அடங்கியுள்ளது.

உடற்செல்களை பாதுகாக்கிறது

 முருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.

அழற்சிகளில் இருந்து விடுதலை

 முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாகக்க உதவுகிறது. குறிப்பாக, நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

சர்க்கரை நோய் அறிகுறிகள்

இது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்.

 

மூளையை வளப்படுத்தும்

முருங்கை இலையின் பொடியானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது அல்சைமர் நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உள்ள விட்டமின் இ மற்றும் விட்டமின் சி ஆனது, மன வளம், நியாபக திறன் ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது.

கார்டிவாஸ்க்குலர் :

முருங்கை இலையின் பொடியானது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முக்கியமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

கல்லீரல் பாதுகாப்பு

முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.

பாக்டீரியா எதிர்ப்பு

 முருங்கை இலையில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது, சருமத்தில் ஏற்படும் தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது.

புண்களை ஆற்றும்

 தன்மை முருங்கையின் இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. இது புண்கள் மற்றும் இரத்தம் வெளியேறுவதை வேகமாக குறைக்க உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது ?

நீங்கள் முருங்கை இலை பவுடரை டீ ஆக குடிக்கலாம். இது மிக சுவையானதாக இருக்கும். இந்த பவுடரை தினமும் அரை அல்லது ஒரு டீஸ்பூன் அளவிற்கு குடிக்கலாம்.

English Summary: Enormous Health benefits of Moringa Published on: 03 January 2019, 12:19 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.