வெற்றிலை நம் பாட்டி தாத்தா சாப்பிட்டு பார்த்திருக்கிறோம். வெற்றிலையில் சுண்ணாம்பு,பாக்கு சேர்த்து சாப்பிடுகிறார்கள், அப்படி என்னதான் இருக்கிறது அந்த வெற்றிலையில். வெற்றிலை ஒரு சிறந்த மூலிகை செடியாகும். அது வெறும் இலை அல்ல சிறந்த இயற்கை மருந்தாகும். பல்வேறு உடல் சம்பத்தப்பட்ட அஜீரணம், ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, பக்கவாதம், அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கு வெற்றிலை மிக மிக சிறந்த இயற்கை மருந்தாகும்.
வெற்றிலையின் சத்துக்கள்
நீர்சத்து 84.4%
புரதச்சத்து 3.1%
கொழுப்பு சத்து 0.8%
கலோரி அளவு 44
கால்சியம்
வைட்டமின் "சி"
தயமின்
கரோட்டின்
ரிபோபிளேவின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
என்னென்ன பிரச்சனை எவ்வாறு பயன் படுத்துவது
வெற்றிலையை பயன் படுத்தும் போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு ஆகியவற்றை நீக்கி விட்டு உபயோகிக்க வேண்டும்.
சளித்தொல்லை
வெற்றிலையை கசக்கி அதன் சாறை உறுஞ்சினாள் சளி மற்றும் தலை பாரம் தீரும். குழந்தைகளுக்கு வெற்றிலையில் 5,6 துளசி இலைகளை வைத்து கசக்கி சாறு பிழிந்து கொடுக்கலாம்.
வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை
மாலை நேரத்தில் வெற்றிலையுடன் சிறிதளவு மட்டும் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டால் வாய்புண், வாயில் துர்நாற்றம், வயிற்று புண் குணமாகும்.
பசியின்மை
வெற்றிலையுடன் பாக்கு குறைவாகவும் சுண்ணமாபு அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசியின்மை இருப்பவர்களுக்கு நல்ல பசியை தூண்டும்.
எதிர்ப்பு சக்தி
வெற்றிலையில் வீரியமிக்க நோய் எதிரிப்பு சக்தி கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதால் உடல் பலவீனம், சோம்பல், மந்தம் உணர்பவர்களுக்கு சிறந்தது.
வலி நிவாரணி
வேலை அலைச்சல் அல்லது, அடிபட்ட இடத்தில் வலி ஏற்படும் நேரங்களில் ஒரு வெற்றிலை போட்டு நன்கு மென்று நீர் அருந்தினால் வலி குறையும்.
காயங்கள்
வெட்டுக்கள், சிராய்ப்புகள் போன்ற இடங்களில் வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மேல் தடவி வந்தால் சீக்கிரத்தில் குணமாகிவிடும்.
சிறுநீர் பெருக்கி
சிலருக்கு சிறுநீர் போவதில் பிரச்சனை ஏற்படும். இதை குணமாக்க வெற்றிலை சாறை அவ்வப்போது பருகி வந்தால் நச்சுக்கள் நீங்கி சிறுநீர் பெருகி சரியான கால இடைவெளியில் சிறுநீர் போக உதவும்.
எலும்புகள் வலுப்பெற
வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி சாப்பிட்டு வந்தால் அணைத்து எலும்புகளும் வலுப்பெறும். மேலும் எலும்புகள் சுலபத்தில் பாதிப்படையாமலும், உடையாமலும் வலுவூட்டுகிறது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments