கொரோனாக் காலத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள்,மூலிகை இலையினால் ஆன முகக்கவசத்தைப் பயன்படுத்துகின்றனர்.
கொரோனாக் கோரத்தாண்டவம் (Corona claim)
உலக நாடுகளை உலுக்கியது மட்டுமல்லாமல், இந்தியாவிலும் தமது 2-வது அலையை விஸ்தரிக்கவிட்டுக் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது கொரோனா.
ஊரடங்கு (Curfew)
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டது.
முகக்கவசம் கட்டாயம் (The mask is mandatory)
அதேநேரத்தில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அலட்சியம் (Indifference)
இருப்பினும், நம்முள் சிலர் பின் விளைவுகளைச் சிந்திக்காமல், முகக்கவசம் அணிவதைச் சுமையாகக் கருதுவதால், அலட்சியமாக முகக்கவசம் அணியாமல் திரிகின்றனர்.
பழங்குடியினரின் பக்குவம் (Maturity of the tribe)
ஆனால், காட்டுக்குள் இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினரோ, மூலிகை இலையை முக கவசமாக அணிந்து வலம் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு வடகரைபாறை மக்களிடம்தான் இந்த புது வழக்கம் உள்ளது.
கொரோனா இல்லை (No corona)
இங்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றபோதிலும், முக கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பழங்குடியின மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளனர். இருப்பினும் முகக்கவசம் சற்று ஆரோக்கியம் நிறைந்ததாகவும், செலவில்லாததாகவும் இருக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் சிந்தித்தனர். இதன் அடிப்படையில், மூலிலை இலை முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜலதோஷத்திற்கு மருந்து (Remedy for colds)
வனப்பகுதியில் உள்ள பிசிலாம் மரத்தின் இலை, கிருமிகளை நம்மிடம் அண்ட விடாது என முன்னோர்களின் அறிவுரை. குறிப்பாகக் குழந்தைகளின் ஜலதோஷ பிரச்னைக்கு, இந்த இலை மற்றும் வெங்காயத்தை மாலையாக கோர்த்து அணிவது வழக்கம். இதன் மூலம் ஜலதோஷம் விரைவில் நீங்கிவிடுகிறது.
நுரையீரல் (Lung)
இதை அணிவதால், இந்த இலையின் மணம் நுரையீரல், சுவாசப் பாதைகளை துாய்மையாகப் பராமரிக்கும் என்பதால், வெளியில் செல்லும்போது இதை முக கவசமாக அணிகிறார்கள்.
இவ்வாறு, பழங்குடியின மக்கள் கூறுகின்றனர். இந்த முறையை மற்றவர்களும் பயன்படுத்தினால், காசு செலவும் ஆகாது, ஆரோக்கியமும் உறுதி செய்யப்படும்.
மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!
2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்
Share your comments