சிறுநீரக பிரச்சினையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் (Kidney stone) உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
நன்னாரி வேர்
வீடுகளில் மண்பானையில் நீர் ஊற்றி நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்சை வேர் போன்றவற்றை போட்டு அருந்தினால் குடல், வயிறு, சிறுநீரகம் (Kidney) தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
வாழைத்தண்டு
வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.
அன்னாசிபழம்
அன்னாசிபழத்தில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் (Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளதால் இதை சாப்பிடலாம்.
கொள்ளு
கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை என்பதால், தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சரியான உணவு முறையைப் பயன்படுத்தி உண்பதால், சிறுநீரகம் மட்டுமல்ல எந்த நோயும் நம்மை அண்டாது. "நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்" என்பதை உணர்ந்து நல்உணவை சரிவிகித அளவில் உண்ண வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments